கேரளா: கேரள மாநிலம் இடுக்கியில் 30 அடி பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். புல்லுப்பாறை அருகே வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்த பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது. இன்று காலை 6.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி காயமடைந்தவர்களை மீட்டனர். இதில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மாவேலிக்கரையில் இருந்து கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்தை […]
கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்து கட்டணம் 15% உயர்த்தப்படுவாக அம்மாநில போக்குவரத்துத்துறை அறிவித்துள்துய. அனைத்து மாநில சாலை போக்குவரத்து கழகங்களிலும் (எஸ்ஆர்டிசி) பேருந்து கட்டணத்தை 15 சதவீதம் உயர்த்த கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பெங்களூரு பெருநகர போக்குவரத்துக் கழகம் (பிஎம்டிசி) உள்ளிட்ட அனைத்து எஸ்ஆர்டிசிக்களுக்கும் ஜனவரி 5 முதல் உயர்த்தப்பட்ட கட்டணம் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதன் மூலம் […]