தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 5 மாநில தேர்தல், பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்டவைகள் தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், தமிழகத்தை பொறுத்தவரையில் ஆளுநர் ஒரு பிரச்சனையாக மாறியுள்ளார். ஒரு ஆளுநர் இந்தளவுக்கு பிரச்னைக்குரிய நபராக மாறியது என்பது இதுவரை தமிழக வரலாற்றில் கிடையாது. எவ்வளவு சிரமங்களை சந்தித்தாலும், அதைப்பற்றி அக்கறை […]