ஓசூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்.! திடீரென பரவிய வாயு குறித்து தீவிர விசாரணை.!

ஓசூரில் அரசு பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள கழிவுநீர் தொட்டியில் இருந்து வெளியாகி நச்சு வாயுவால் பாதிக்கப்பட்டு 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் காமராஜ் காலனி பகுதியில் இயங்கி வரும் அரசு பள்ளியில் பயின்று வரும்  மாணவர்கள் இன்று திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் காமராஜ் காலனி பகுதியில் அரசு நடுநிலை பள்ளி இயங்கி வருகிறது. அப்போது அருகில் … Read more

கேஸ் லாரி மீது ஆம்னி வேன் மோதி 4 பேர் பலி..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் சுண்டாம் பட்டியில் நின்றுகொண்டிருந்த HB கேஸ் லாரி மீது ஆம்னி வேன் மோதி 4 பேர் உயிரிழந்துள்ளனர். வாகன ஓட்டுநர் ரமேஷ், ஒரு வயது குழந்தை, தீபா, அஞ்சலி ஆகிய 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் காயம் அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி பட்டாசு குடோனில் தீ விபத்து.!

கிருஷ்ணகிரியில் பட்டாசு குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது, 1 மணி நேர போராட்டத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டுள்ளது. பொதுவாக பட்டாசு குடோன்களில் உராய்வுகள் மற்றும் மின்சார கசிவினால் தீ விபத்து ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரையில் கமலா பாஷ் என்பவர் சாமல்பட்டியில் சொந்தமாக பட்டாசு குடோன் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், இன்று எதிர்பாராதவிதமாக இந்த பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டதும், சம்பவ … Read more

கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. செல்லக்குமாருக்கு கொரோனா.!

கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. செல்லக்குமாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் செல்லக்குமாருக்கு கரோனா பரிசோதனையில் தொற்று உறுதியானதை அடுத்து அவர் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே ஒரே நாளில் 4 கோவில்களில் திருட்டு….!

கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே ஒரே நாளில் 4 கோவில்களில் மர்ம நபர்கள் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கெலமங்கலத்திலிருந்து உத்தனப்பள்ளி செல்லும் சாலையில்,ஒரு மாரியம்மன் கோவில் உள்ளது. அந்த கோவிலில் நேற்று சில மர்ம நபர்கள் கோவிலின் சுவற்றின் மீது ஏறி அங்குள்ள அம்மன் சிலையின் கழுத்திலிருந்த இரண்டரை பவுன் தாலி செயின், மற்றும் உண்டியல் பணம் , கம்மல், மற்றும் அம்மனுக்கு அலங்கரிக்க வைத்திருக்கும் புடவைகள் அனைத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர். … Read more

கிருஷ்ணகிரி திமுக எம்.எல்.ஏ. செங்குட்டுவனுக்கு கொரோனா.!

கிருஷ்ணகிரி தொகுதி திமுக எம்.எல்.ஏ. செங்குட்டுவனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி தொகுதி திமுக எம்.எல்.ஏ. செங்குட்டுவனுக்கு காய்ச்சல், சளி மற்றும் இருமல் காரணமாக ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தார். இதையடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர், வெளியான கொரோனா பரிசோதனை முடிவில் திமுக எம்.எல்.ஏ. செங்குட்டுவனுக்கு கொரோனா  பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், இதற்கு முன் 13 எம்எல்ஏக்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று திமுக எம்.எல்.ஏ. செங்குட்டுவனுக்கு கொரோனா உறுதியானதனால், தமிழகத்தில் கொரோனாவால் … Read more

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் குறைவு – முதலமைச்சர் பழனிசாமி

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சென்று தமிழ்நாடு முதலமைச்சர்  பழனிசாமி அவர்கள் ஓசூர் பன்னாட்டு மலர் ஏல மையம் அமைக்க அடிக்கல் நாட்டினார், பின்னர் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனையின்போது முதலமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து வருகிறார் . அப்போது அவர் கூறுகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 11,919 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் குறைவாகக்தான் இருக்கிறது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவிர்த்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு … Read more

மூன்று விவசாயிகளை கொன்ற “கல் ராஜா” யானை சிக்கியது.!

மூன்று பேரை தாக்கிக் கொன்ற ஒற்றை காட்டு யானை பிடிபட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனபகுதியில் இருந்து ஊருக்குள் வந்த ஒற்றை கல்ராஜா என்ற காட்டு யானை 15 நாட்களில் மூன்று விவசாயிகளை தாக்கி கொன்றது. இந்நிலையில் அந்த யானையை தீவிரமாக தேடி வந்த வனதுறையினர் இன்று காலை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். மேலும் யானையை அடர்ந்து வனப்பகுதிகுள் விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் யானையை சத்தியமங்கலம் காட்டில் விடுவதாக கூறப்படுகிறது இதனால் … Read more

#BREAKING :பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரியில் கொரோனா பரவியது.!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல்முறையாக ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல்முறையாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனஹள்ளி அருகே நல்லூரை சேர்ந்த 67 வயதான முதியவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. இவர் ஆந்திரா மாநிலத்தில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்று வந்த நிலையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவருடன் வந்த மேலும் மூன்று பேர், அவரின் உறவினர்கள் 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.மேலும் கொரோனா தொற்று … Read more

தமிழகத்தில் இந்த ஒரு மாவட்டத்தில் மட்டும் கொரொனா பாதிப்பு ஏற்படவில்லை !

தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. தமிழகத்தில் நேற்று(ஏப்.30) ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,323 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 1258 உயர்ந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 138 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 906 ஆக உயர்ந்துள்ளது. கோவையில் 141 பேரும், திருப்பூரில் 112 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் … Read more