ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்திவரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் முன்பு இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா நேரில் ஆஜராகியுள்ளார். டி.டி.வி.தினகரன் ஆதரவளரான வெற்றிவேல் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோவை வெளியிட்ட போது அதற்கு கிருஷ்ணப்பிரியா கண்டனம் தெரிவித்தார். அந்த வீடியோவை எடுத்தது சசிகலா என்று தெரிவித்த கிருஷ்ணப்பிரியா, ஜெயலலிதா தனக்குப் பின்னால் இருக்கும் மருத்துவக் கருவிகளைப் பார்ப்பதற்காக அந்த வீடியோ எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார். இன்னும் பல வீடியோக்கள் இருப்பதாகவும் அவர் கூறினார். கிருஷ்ணப்பிரியாவுக்கு வீடியோ குறித்தும் ஜெயலலிதா சிகிச்சை […]