மாணவர் கிருபா மோகன் நீக்கப்பட்டது தொடர்பாக பதிலளிக்க சென்னை பல்கலைக்கழகத்திற்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்துள்ளது. கிருபா மோகன் என்ற மாணவர் சென்னை பல்கலைக்கழக தத்துவவியல் துறையில் முதுகலை முதலாமாண்டு படித்து வந்தவர். பல்கலைக்கழகத்தில் சேர்ந்த அவர் சில நாட்கள் வகுப்புகளுக்குச் சென்று வந்தநிலையில்,அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம் என்கிற மாணவர் அமைப்பில் செயல்பட்டார் என்பதற்காக அவரை கல்லூரியிலிருந்து நீக்கியது கல்லூரி நிர்வாகம். அம்பேத்கர் பெரியார் வாசிப்பு வட்டத்தில் இயங்கியதாக கூறி தம்மை நீக்கிவிட்டதாக மாணவர் கிருபா மோகன் […]