திருமழிசை சந்தை திறக்கப்படாத காரணத்தால், வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரையில், இதுவரை 4825 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும், சென்னையில் தான் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 2,000-க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, கோயம்பேடு சந்தை கொரோனா வைரஸ் காரணமாக, திருமழிசை பகுதிக்கு மாற்றப்படுவதாக கூறப்பட்டது. இந்நிலையில், இன்று முதல் திருமழிசையில் காய்கறி […]