கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையப் பெயர் மாற்றதிற்கு வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேடு மெட்ரோ நிலையம், “பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ ” என்று பெயர் மாற்றப்பட்டதற்கு கடும் கண்டனம் எழுந்து வருகிறது.இந்நிலையில் இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகர மெட்ரோவின் தலைமை அலுவல் அகம், கோயம்பேட்டில் அமைந்து இருக்கின்றது. அங்கே இருக்கின்ற பாலத்திற்கு, கடந்த சில நாள்களாக பெயிண்ட் அடித்தார்கள். திடீரென நேற்று, ‘பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ’ என, […]