கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவையைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி ஒருவர், முன்பு படித்த சின்மயா பள்ளியின் ஆசிரியர் வருண் சக்கரவர்த்தி என்பவர் அளித்த பாலியல் தொல்லை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தையே மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. குறிப்பாக, சில பெயர்களை குறிப்பிட்டு இவர்கள் யாரையும் சும்மாவிடக்கூடாது என்று கைப்பட எழுதியிருப்பது அவர் அனுபவித்த வேதனையை சுட்டிக் காட்டுகின்றது. […]