கோவையில் சாமிசெட்டிபாளையம் என்ற ஊரை சேர்ந்த பெருமாள் இவருக்கு ஒரு மகள் பெயர் கவிதா பத்திரம் எழுதும் இடத்தில் வேலை செய்து வருகிறார் இவர் வீட்டில் இரண்டு வருடங்களாக ஒரு நாய்க்குட்டி வளர்த்து வந்தார் அதற்கு சீசர் என்று பெயரிட்டு செல்லமாக வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் வளர்த்த நாய்க்கு உணவு வைப்பது குளிப்பாட்டி விடுவது என ரொம்ப செல்லமாக வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வரும்போதெல்லாம் இவரது காலடிச் சத்தத்தைக் கேட்டு […]
போதையில் வந்த வாகனம் மோதியதால் உயிரிழந்த மனைவியின் சடலத்துடன் மதுக்கடையை மூடக்கோரி கணவர் போராட்டம் செய்தார். கோவை மாவட்டம் ஆனைக்கட்டி வழியாக கேரளா செல்லும் சாலையில் ஜம்புகண்டி என்னும் இடத்தில அரசுக்கு சொந்தமான டாஸ்மார்க் கடை ஓன்று இருந்து வருகிறது. இந்த கடையை மூடக்கோரி பலரும் கோரிக்கை வைத்த நிலையில் அரசு செவி சாய்க்கவே இல்லை. கடந்த 10 நாட்களுக்கு முன் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.இந்நிலையில், நேற்று அங்கு குடித்துவிட்டு போதையில் வந்த இருவர் சாலையில் […]
கோவையை சேர்ந்தவர்கள் பவித்ரா மற்றும் விக்ரம் தம்பதியர். இதில் பவித்ரா_வுக்கு கடந்த சனிக்கிழமை பிரசவவலி எடுத்து கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிரசவ வார்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு ஆண் குழந்தை பிறந்தது. நேற்று இரவு முதல் நல்ல உடல்நிலையில் இருந்த குழந்தை இன்று பிற்பகல் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.இதையடுத்து இறந்த குழந்தை பெற்றுக்கொண்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் குழந்தையை அடக்கம் செய்வதற்காக சென்றுள்ளனர். அடக்கம் செய்யும் இடத்தில் குழந்தையின் தலையில் இரத்த காயம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் […]
சபரிமலை விவகாரத்தில் மதத்தை காட்டி பெண் உரிமையை பறிப்பது முறையானது இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக கலவரம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார்
கோவையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் வேளாண் திருவிழாவை முன்னிட்டு ரேக்ளா ரேஸ் போட்டிகள் நடைபெற்றன. கோவை நீலாம்பூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வேளாண் திருவிழாவை முன்னிட்டு ரேக்ளா ரேஸ் போட்டிகள் நடத்தப்பட்டன. 200க்கும் மேற்பட்ட ரேக்ளா வாகனங்கள் போட்டியில் பங்கேற்று சீறி பாய்ந்தன. 100 மீட்டர், 200 மீட்டர் தனித்தனியாக நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. இந்த போட்டியை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
பிலிப்பைன்ஸில் நாட்டில் சமீபத்தில் மிஸஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி நடைபெற்றதில் கோவையை சேர்ந்த காயத்ரி நடராஜன் கலந்து கொண்டு பட்டம் வென்று அசத்தியுள்ளார். இதையடுத்து பேசிய அவர் சாதனைக்கு நம்முடைய வயது ஒரு தடையாகாது என்றும் திருமணத்திற்கு பிறகு தான் நான் பல சாதனைகள் படைத்ததாகவும் காயத்ரி நடராஜன். காயத்ரி நடராஜன் பல துறைகளிலும் சாதனை படைத்தவர் என்பது பாராட்டுக்குரியது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்த விபத்தில் பத்து குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஓடந்துறையில், பாக்கு தோப்புகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தனியார் இடத்தில் குடிசைகளை அமைத்து தங்கியுள்ளனர். இந்த நிலையில் தொழிலாளர்கள் தங்கியிருந்த குடிசை வீடு ஒன்றில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. குடிசை வீடு என்பதால் மளமளவென பெருகிய தீ, அருகே இருந்த மற்ற குடிசை வீடுகளுக்கும் பரவியது. […]
கோவையில் 216 கோடி ரூபாய் மதிப்பில் உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரையிலான மேம்பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டத்தின் உயிர்நாடியாக உள்ளது உக்கடம் பகுதி. வெளி மாநிலங்களுக்கு செல்லவும்,மதுரை, திண்டுக்கல் போன்ற தென்மாவட்டங்களுக்கு செல்வதற்கும் முக்கிய நுழைவு வாயிலாக இந்தப் பகுதி அமைந்துள்ளது. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான வண்டிகளில் லட்சக்கணக்கான மக்கள் பயணிப்பதால் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இந்தநிலையில் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று 216 கோடி ரூபாய் மதிப்பில் உக்கடம் முதல் […]
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் போதைப்பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேட்டுப்பாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட நகர மற்றும் கிராமப்புறங்களில், தமிழக அரசின் மதுவிலக்கு காவல்துறை மற்றும் ஆயத்தீர்வுத்துறை சார்பில், போதை பொருட்களுக்கு ஏதிரான விழிப்புணர்வு கலை நிகழ்சிகள் நடத்தப்பட்டன. கிராமிய பாடல்கள் மற்றும் நடனங்கள் ஆடி கலைக்குழுவினர் விழிப்புணர்வு பிரசாரத்தில் […]
தேக்கம்பட்டியில் கோயில் யானைகளுக்கான புத்துணர்ச்சி முகாமில் காட்டு யானைகள் வராமல் தடுக்க மின்விளக்கு தோரணங்களால் வேலி அமைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பவானி ஆற்றங்கரையோரத்தில் தேக்கம்பட்டி என்னுமிடத்தில் ஏழாவது ஆண்டாக யானைகள் புத்துணர்ச்சி முகாம் நடைபெற்று வருகிறது. கடந்த பதினான்காம் தேதி துவங்கி, வரும் ஜனவரி முப்பதாம் தேதி வரை நாற்பத்தெட்டு நாட்கள் நடைபெறும் இம்முகாமில் 28 யானைகள் பங்கேற்றுள்ளன. இந்தநிலையில், புத்துணர்ச்சி முகாமில் உள்ள கோவில் யானைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் ஆயிரக்கணக்கான குண்டு […]
கோவை மாவட்டம் தெலுங்குபாளையம் பகுதியில் பல்வேறு இடங்களில் புதிய கட்டிடங்களுக்கான கட்டுமானபணியை, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி துவக்கி வைத்தார். கோவை தெலுங்குப்பாளையம் பகுதியில் உள்ள செல்வபுரம்,இந்திரா நகர் பகுதிகளில் அம்ருத் திட்டத்தின் கீழ் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் மூடியுடன் கூடிய மழை நீர் வடிகால்,10 லட்சம் ரூபாய் மதிப்பில் வரிவசூல் மையம், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 288 அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகிய கட்டுமான பணிகளுக்கு […]
கோவை மாவட்டம் வால்பாறை அருகே குடியிருப்புக்குள் புகுந்த 6 காட்டு யானைகள், வீடுகளை இடித்து சேதப்படுத்தியதால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர். சின்னக்கல்லார் பகுதியில் புகுந்த 6 காட்டு யனைகள் வீடுகளை இடித்து சேதப்படித்தியது. இதனால் வீட்டிலிருந்த பொருட்கள் சேதமாகின. யானை புகுந்தது குறித்து கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்ததாகத் தெரிகிறது. ஆனால் வனத்துறையினர் வரவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.வன விலங்குகளிடம் இருந்து தங்களை பாதுகாக்க வேண்டும் எனவும், பாதுகாப்புக்காக வன அலுவலர்களை பணியில் […]
கோவை அரசு மருத்துவமனை எதிரே உள்ள 10-க்கும் மேற்பட்ட கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். கோவை அரசு மருத்துவமனைக்கு எதிரே 10-க்கும் மேற்பட்ட கடைகளில் உணவு தரம் சரியில்லை என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது.இதையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள கடைகளில் ஆய்வு நடத்தினர்.அப்போது அங்கு உள்ள டீக்கடையில் உள்ள டீ யின் தரம் மற்றும் பால் தரம் ஆய்வு செய்யப்பட்டது. அதேபோல அந்த […]
கோவையில் மனித உணர்வுகளை பிரதிபலிக்கும் ரோபோவை உருவாக்கி இளைய தலைமுறையினர் சாதனை படைத்துள்ளனர். எத்தனை புதியவகை ரோபோக்களை உருவாக்கினாலும் அவை, இயந்திரமாக செயல்படும். மனித உணர்வுகளை புரிந்துகொள்ளும் திறனுடையவையாக இதுவரை எந்த ரோபோவும் உருவாக்கப்பட்டதில்லை.கோவையில் உள்ள தனியார் ரோபோட்டிக்ஸ் நிறுவனத்தில் படித்துவரும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள், நிகழ்வுக்கு ஏற்ப கண்கள் வழியே உணர்வுகளை நவரசமாய் வெளிப்படுத்தும் ரோபோவை உருவாக்கி அசத்தியுள்ளனர். ஒரு தனியார் அமைப்பு மூலம் 25 பேர் கொண்ட குழு உருவாக்கியிருப்பது இதுவே முதல் முறை. […]
கோவையில் காவல்துறையினரால் அனுமதி மறுக்கப்பட்ட மதநல்லிணக்கம் கருத்தரங்கிற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பாக மக்கள் ஒற்றுமை மேடை கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: கோவை மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தினத்தையொட்டி 2.10.2018 அன்று நடைபெறவுள்ள மதநல்லிணக்க கருத்தரங்க நிகழ்ச்சிக்கு கோவை மாநகர காவல்துறை அனுமதி மறுத்திருந்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவை மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கோவை […]
கோவையில் கொட்டிய கனமழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். கோவையில் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடியது இதனால் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாகவே கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடுமையான வெயில் வாட்டி வதைத்த வந்த நிலையில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மாலை தொடங்கிய மழை கனமழையாக மாறியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. கோவையில் காந்திபுரம், ரயில்நிலையம், […]
கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பெய்த கனமழை சற்று ஓய்ந்ததை அடுத்து, இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பி வருகின்றனர்.பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருந்தனர். மேலும், மலைப்பாதையில் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதால், எஸ்டேட் பகுதிகளுக்கு பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது, அனைத்தும் சீரானதை அடுத்து, மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. DINASUVADU
கோயம்புதூர் மாவட்டம் வால்பாறையில் யானை ஓன்று வலம் வருகிறது.அந்த யானை அப்பகுதி வழியாக வரும் வாகனங்களை வழி மறிப்பது வாகனங்களை விரட்டுவது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது.இதனால் பீதி அடைந்த வாகன ஓட்டுனர்கள் வனப்பகுதியில் யானையை விரட்ட வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.