பாட்னாவில் உள்ள கோட்வாலி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் திடீர்ரென முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த விதமான காயமும் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த விபத்தில் முதல் தளத்தில் வைக்கப்பட்டு இருந்த பீகார் பள்ளி தேர்வு ஊழல் தொடர்பான சில பிரதிகள் தீப்பிடித்தன. தீ பிடித்த பிரதிகளால் இந்த வழக்கில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என ஏஎஸ்பி ஸ்வர்ன் பிரபாத் தெரிவித்தார். […]