கொசஸ்தலை ஆற்று நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணை நிரம்பி வந்ததால் கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து இதுவரை 4 முறை கொசஸ்தலை ஆற்றில் தண்ணீரை ஆந்திர மாநில அதிகாரிகள் திறந்து விட்டனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் 5-வது முறையாக சுமார் 300 கன அடி நீரை கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. […]
கொசஸ்தலை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது.இதன் காரணமாக ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து 620 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொசஸ்தலை ஆற்றில் மக்கள் இறங்க வேண்டாம் என்று திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.அந்த வகையில் நேற்று வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.குறிப்பாக சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் மழை பெய்தது. இதன் விளைவாக திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவரது அறிவிப்பில், திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கொசஸ்தலை ஆற்றில் மக்கள் இறங்க வேண்டாம் .மக்கள் […]