சிலம்பரசனின் 50வது திரைப்படத்தை அவரே இயக்க உள்ளாராம். அதற்கான கதை எழுதும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறாராம். மாநாடு படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து சிலம்பரசன் தனது அடுத்த இன்னிங்க்ஸை கோலாகலமாக தொடங்கியுள்ளார். அடுத்தடுத்து அவர் தனது படங்களின் ஷூட்டிங்கில் விறுவிறுப்பாக கலந்துகொண்டு வருகிறார். தற்போது கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்பட ஷூட்டிங்கில் உள்ளார். மாநாடு வெற்றி கொண்டாட்டத்திற்கு பிறகு இன்று மீண்டும் வெந்து தணிந்தது காடு திரைப்பட ஷூட்டிங்கில் கலந்துகொண்டுள்ளார். […]