டிரம்ப் தனது முடிவை மாற்றியதற்கு கிம் அனுப்பி வைத்த பெரிய கடிதமே காரணம் என்பது தெரியவந்துள்ளது. சிங்கப்பூரில், ஜூன் 12-ஆம் தேதி டிரம்ப்பும், கிம்மும் சந்திப்பதாக இருந்தது. இந்நிலையில் கிம்மின் ஆக்ரோஷப் போக்கு காரணமாக, அவருடனான சந்திப்பை ரத்து செய்வதாக மே 24- ஆம் தேதி, டிரம்ப் கடிதம் எழுதினார். இதில் சுதாரித்துக் கொண்ட கிம், டிரம்ப்பை சந்திக்க ஆவலுடன் இருப்பதாகக் கூறியதுடன், வடகொரிய ராணுவ உயர் அதிகாரி கிம் யோங் சோலை, டிரம்ப்பை சந்திக்க அனுப்பி […]
சீனாவின் தென்பகுதியில் அமைந்து இருப்பது தென்சீனக்கடல். பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியாக திகழ்கிற தென்சீனக்கடல், 35 லட்சம் ச.கி.மீ. பரப்பளவிலானது. உலகின் 3-ல் ஒரு பங்கு கப்பல் போக்குவரத்து இந்தக் கடல் வழியே நடைபெறுகிறது. அது மாத்திரம் அல்லாமல், இந்தக் கடலின் அடியில் ஏராளமான எண்ணெய், இயற்கை எரிவாயு வளம் உள்ளது. இதன் காரணமாக இந்த கடல் முக்கியத்துவம் பெற்று உள்ளது. இருப்பினும் இந்த கடலின் சர்ச்சைக்குரிய பகுதிகள் மீது சீனாவுடன் வியட்நாம், பிலிப்பைன்ஸ், தைவான், மலேசியா […]
குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கான தூதுக்குழுவில் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் சகோதரி, இடம்பெற்று தென்கொரியாவுக்கு வருவதை அந்நாடு வரவேற்றுள்ளது. இரு நாடுகள் இடையே 1950ஆம் ஆண்டில் தொடங்கி 1953ஆம் ஆண்டுவரை நடைபெற்ற கொரிய போருக்குப் பின்னர், வடகொரிய அதிபர் குடும்பத்தை சேர்ந்த யாரும் தென்கொரியா சென்றதில்லை. இந்நிலையில், முதல் முறையாக வடகொரிய அதிபர் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் தென்கொரியாவுக்கு செல்ல உள்ளார். அதிபர் கிம் ஜோங் உன்னின் இளைய சகோதரி கிம் யோ ஜோங் (Kim Yo […]