கூடங்குளம் அணுமின்நிலைய வாசலில் 100க்கும் மேற்பட்ட உள்ளூர் மக்கள் முற்றுகை போராட்டம். நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்காததை கண்டித்து, 1000க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளூர் மக்களுக்கு பணி வழங்காமல், வெளி மாநிலத்தவர்களுக்கு தந்ததை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்ட 139 பேரில் உள்ளுறை சேர்ந்தவர்கள் யாரும் இல்லை என போராட்டக்காரர்கள் குற்றசாட்டுகின்றன. திமுக மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் மற்றும் ஊராட்சி […]
நெல்லையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 452 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாளுக்கு நாள் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் அதிகரித்து வருகிற நிலையில், தற்போது தமிழக அரசு பல புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில், நெல்லையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 452 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. […]
நாமக்கல் மாவட்டம் குமரபாளையத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு நலத்திட்டங்களை வழங்கிய பிறகு பேசிய அமைச்சர் தங்கமணி, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள 3 மற்றும் 4வது அலகுகளில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும், தமிழகத்திற்கு வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். மேலும் புதிய மின் இணைப்பிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது ஏற்படும் தொழிநுட்ப கோளாறுகள் உடனுக்குடன் சரி செய்யப்படுவதாக கூறினார். மின் பொறியாளர் பணியிடங்களுக்கு தமிழில் தேர்வு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
கூடங்குளத்தின் முதல் 2 அணு உலைகளின் சார்பற்ற அறிக்கையை வெளியிட வேண்டும். கூடங்குளம் அணு உலை முறைகேடு குறித்து அரசியல் கட்சிகள் பேச மறுக்கின்றன கூடங்குளம் அணு உலை முறைகேடு குறித்து யார்மீது வழக்குப்பதிய உள்ளார்கள் என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் தெரிவித்துள்ளார்.