கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் வடமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தில் காயமடைந்த காவலர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார் . இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ளார் அறிக்கையில்,திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இத்தொழிலாளர்களின் விருப்பத்தின் அடிப்படையில் ,அவரவர் மாநிலங்களுக்கு , அம்மாநில அரசின் முறையான அனுமதியுடன் ,படிப்படியாக அனுப்பி வைக்க தமிழ்நாடு அரசு அனைத்து விதமான ஒருங்கிணைப்பு நடவடடிக்கைகளையும் போர்க்கால […]
கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமத்தில் தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில், இமான் அண்ணாச்சி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். அதன் பின் இவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், மக்களுக்கு பேராபத்தை உருவாக்கக் கூடிய கூடங்குளம் அணுக்கழிவு திட்டத்தை எதிர்த்து மக்கள் போராடினால், முதல் ஆளாக கலந்து கொள்வேன் என்றும், அந்த போராட்டத்தின் போது, துப்பாக்கி சூடு நடத்தினால், முதல் குண்டு என் மீது பாயட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.