தமிழகத்தை தனியாக பிரிக்க வேண்டும் என்று பாஜக நினைக்கவில்லை என வானதி சீனிவாசன் அவர்கள் தெரிவித்துள்ளார். கோவை சித்தாபுதூர் வி.கே.கே மேனன் சாலையிலுள்ள பாஜகவின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் அக்கட்சி சார்பாக ஆடிட்டர் ரமேஷின் எட்டாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் அவர்கள் கலந்து கொண்டார். அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தை தனியாக பிரிக்க வேண்டும் […]
தமிழ்நாட்டை பிரித்து கொங்குநாடு என்ற தனி மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில். தமிழ்நாட்டிலுள்ள மேற்கு மாவட்டங்களான கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைப் பிரித்து ‘கொங்கு நாடு’ எனத் தனியாக ஒரு மாநிலத்தை உருவாக்க மத்திய பாஜக அரசு முயற்சிப்பதாக செய்திகள் வெளியானதால் சமூக வலைதளங்களில் கடந்த சில நாள்களாகச் சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த ஜூன் 8-ம் தேதி […]
கொங்குநாடு என்ற பிரிவினை விதையை விதைக்க வேண்டாம் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேட்டி. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, கொங்குநாடு என்ற பிரிவினை வந்தால் தமிழகத்தின் அமைதி பாதிக்கும் என்றும் நாடு பலமாக இருக்காது எனவும் தெரிவித்துள்ளார். கொங்குநாடு என்ற சிந்தனை விஷமத்தனமானது. சென்னை முதல் குமரி வரை தமிழர்கள் என்ற உணர்வுடன் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். ஆகையால், கொங்குநாடு என்ற பிரிவினை விதையை விதைக்க வேண்டாம். கொங்குநாடு […]
கொங்கு நாடு என்பது பாஜகவின் கருத்து இல்லை என்று தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏஎன்எஸ் பிரசாத் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டை இரண்டாகப் பிரித்து கொங்கு நாடு என்ற யூனியன் பிரதேசத்தை உருவாக்க மத்திய பாஜக அரசு முயற்சிப்பதாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து, இவ்விவகாரம் விவாதப்பொருளாக மாறியுள்ளது. இதனைத்தொடர்ந்து, கொங்கு நாடு குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கொங்கு நாடு என்பது பாஜகவின் கருத்து இல்லை என்று […]