2022 மகளிர் உலக பிளிட்ஸ் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் கோனேரு ஹம்பி வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்திய கிராண்ட்மாஸ்டரான 35 வயது கோனேரு ஹம்பி, 2022 மகளிர் உலக பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் தொடரில், 17 சுற்றுகளில் 12.5 புள்ளிகளுடன் தனது இறுதிச் சுற்றில் டான் ஸோங்கியை தோற்கடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். இதன்மூலம் உலக பிளிட்ஸ் சாம்பியன்ஷிப்பில், வெள்ளிப்பதக்கம் வெல்லும் முதல் இந்திய மகளிர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.