நாகர்கோவில் கோட்டார் வட்டவிளையைச் சேர்ந்தவர் சுதாகர் (வயது 32). இவர் நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பு பகுதியில் பொதுப்பணித்துறை அலுவலக சாலையில் பிரபல செல்போன் நிறுவனம் ஒன்றின் செல்போன்கள் விற்பனை செய்யும் ஷோரூமை நடத்தி வருகிறார். அதில் ரூ.6500 முதல் அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை விலைகொண்ட ஸ்மார்ட் போன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன. நேற்று முன்தினம் இரவு சுதாகர் வழக்கம் போல் ஷோரூமை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலையில் திறக்க வந்தபோது ஷோரூமின் […]