கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தான். ஆர்.ஜி.கர் என்கிற அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளியை கண்டுபிடித்து தகுந்த தண்டனைகள் வழங்கப்படவேண்டும் என போராட்டங்களும் நடைபெற்றது. […]