மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கோலாப்பூரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கோலாப்பூர் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக பதிவாகியுள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.