கல்லூரி தொடங்காததால் வீட்டில் சும்மா தான இருக்க, அதற்கு எங்களோடு வந்து பருத்தி எடு என்று பெற்றோர் கண்டித்ததால் பூச்சி மருந்து குடித்து உயிரிழந்துள்ளார் மாணவன். திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே கோவில்பத்து கிராமத்தை சேர்ந்தவர் வீரையன். இவர் மாதாகோவில் தெருவை சேர்ந்தவர். இவரது மகன் சுரேஷ்குமார் தனியார் பாலிடெக்னீக் கல்லூரியில் படித்து வருகிறார். தற்போது தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணத்தால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இதனால் இவர் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் இருக்கும் இவரது […]