கோடநாடு பங்களாவில் கணினி பொறியாளராக பணியாற்றிய தினேஷ் வீட்டில் சிபிசிஐடி போலீசார் விசாரணை. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தற்கொலை செய்த தினேஷ் வீட்டில் சிபிசிஐடி போலீசார் இரண்டாவது முறையாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் கணினி பொறியாளராக பணியாற்றிய தினேஷ் வீட்டில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அதன்படி, தினேஷ் வீட்டில் சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 49 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழு அமைப்பு. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிபிசிஐடி எஸ்பி சிஎஸ் மாதன் தலைமையில் 49 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை அதிகாரியாக கோவை சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேற்கு மண்டல காவல்துறையில் இருந்து 3 ஆய்வாளர்கள், 5 உதவி ஆய்வாளர்கள். 36 காவலர்களும் உதவியாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கோடநாடு […]
கோடநாடு வழக்கில் தனிப்படை போலீஸ் 316 பேரிடம் நடத்திய விசாரணை தொடர்பான அறிக்கை ஒப்படைப்பு. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தனிப்படை போலீஸ் 316 பேரிடம் நடத்திய விசாரணை தொடர்பான அறிக்கை ஒப்படைக்கப்பட்டது. 316 பேரிடம் பெற்ற வாக்கு மூலங்கள் அடங்கிய 3,600 பக்க விசாரணை அறிக்கை உதகை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உதகை நீதிமன்றம், சிபிசிஐடி போலீசிடம் தனிப்படை போலீஸ் அளித்த 3,600 பக்க விசாரணையை அறிக்கையை தாக்கல் செய்தது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் தனிப்படை […]
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரிக்கப்பட்ட சாட்சியங்களின் வாக்குமூலங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது காவல்துறை. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை தனிப்படை போலீசார் நீதிமன்றத்தின் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மறுப்புலன் விசாரணையில் சசிகலா உள்ளிட்ட 326 சாட்சியங்களின் வாக்குமூலங்கள் அடங்கிய அறிக்கையை உதகை நீதிமன்றத்தில் தனிப்படை போலீசார் தாக்கல் செய்தனர். சிறப்பு காவல் டிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி 1,500 பக்கங்கள் கொண்ட சாட்சியங்களின் வாக்குமூலங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
கோடநாடு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், விசாரணை அதிகாரியாக கூடுதல் டிஜிபி ஷகீல் அக்தர் நியமனம். கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கொள்ளை, கொலை சம்பவம் நடைபெற்றது. இதில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் உட்பட 11 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். கோடநாடு கொலை கொள்ளைச் சம்பவம் நடந்த சில நாட்களிலேயே சேலத்தில் நடந்த விபத்தில் மர்மமான முறையில் […]
கோடநாடு வழக்கு தொடர்பாக அம்மா பேரவை கோவை மாவட்ட இணை செயலாளர் அனுபவ் ரவியிடம் விசாரணை. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் உள்பட 202 பேரிடம் விசாரணை என்பது தொடர்ந்து நடைபெற்றிருக்கிறது. இந்த நிலையில், இன்று கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் அம்மா பேரவை கோவை மாவட்ட இணை செயலாளர் அனுபவ் ரவியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு சாட்சியங்களிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அதிமுக பிரமுகர் […]
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சி விசாரணைக்கு உத்தரவிட சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் காவல்துறை மேல் விசாரணை நடைபெற்று வருவதால், சாட்சி விசாரணைக்கு உத்தரவிட முடியாது என கூறியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக தற்போது மேல் விசாரணை நடத்தப்படும் நிலையில், சாட்சி விசாரணை தொடங்கினால் வழக்கின் போக்கு மாறிவிடும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ஆம் நடைபெற்ற கொலை, […]