கடந்த 2017 ஏப்ரல் மாதம் 24-ம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் 11 பேர் கொண்ட கும்பலால் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இந்தச் சம்பவத்தில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. கார் ஓட்டுநர் கனகராஜ் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி ஏற்பட்ட கார் விபத்தில் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, அதே ஆண்டு ஜூலை 3 […]
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு 7 ஆண்டுகள் கழித்து முதல்முறையாக சசிகலா, நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகில் உள்ள கொடநாடு எஸ்டேட்டுக்கு நேற்று மாலை வந்தடைந்தார். கொடநாடு பங்களாவில் ஜெயலலிதா பெயரில் தியான மடம் மற்றும் சிலை அமைக்கப்பட உள்ள நிலையில், அதற்கான பூமி பூஜையில் கலந்து கொள்வதற்காக, சசிகலா அங்கு சென்றுள்ளதாக கூறப்பட்டது. அதன்படி, கொடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவச்சிலை அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதில் சசிகலா, எஸ்டேட் […]
கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து பல்வேறு கோணங்களில் நடைபெற்று வரும் நிலையில், 7 ஆண்டுகளுக்குப் பிறகு சசிகலா, நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டுக்கு இன்று புறப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவிற்கு பிறகு ஓ.பன்னீர் செல்வம் முதலமைச்சராக பொறுப்பேற்ற நிலையில், அடுத்த சில நாட்களிலேயே அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். பின்னர், சொத்துக்குவிப்பு […]
கொடநாடு வழக்கில் இன்று நடைபெறும் விசாரணைக்காக, சயான் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு உதகை நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். கொடநாடு கொள்ளை, கொலை சம்பவத்தில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ், கோவையை சேர்ந்த பேக்கரி மேலாளர் சயான், வாலையாறு மனோஜ் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டனர். கொடநாட்டில் கொள்ளையடிக்கும் போது அங்கு இரவு காவலில் ஈடுபட்டிருந்த ஓம்பகதூர் என்ற காவலாளியை கொலை செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக கனகராஜ், வாலையாறு மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேர் […]
கோடநாட்டில் கொள்ளை,கொலை_யின் மர்மம் குறித்து C.B.I விசாரணை கோர உள்ளதாக மேத்யூ சாமுவேல் தெரிவித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் மற்றும் சயன் ஆகியோர் கூறிய தகவல்கள் தமிழக அரசியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் கோடநாட்டில் கொள்ளை,கொலை அங்கு நடந்த மர்மங்களுக்கு காரணம் தமிழக முதல்வர் தான் தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் கூறிய பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுக்கு தமிழக முதல்வர் மறுப்பு […]
கோடநாடு விவகாரத்தில் அனைத்தும் விரிவாக விசாரிக்கப்பட வேண்டும் என்று திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா கூறுகையில், கோடநாடு விவகாரத்தில் அனைத்தும் விரிவாக விசாரிக்கப்பட வேண்டும். கோடநாடு காவலாளி மரண வழக்கில் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதர்கான சமிக்கைகள் இருக்கின்றன. கோடநாட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளைகள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. கோடநாடு விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். முதல்வருக்காகத்தான் கொள்ளையில் ஈடுபட்டதாக சயன் பேட்டியளித்தார். கோடநாடு எஸ்டேட்டில் கொள்ளை நடந்தபோது மின்சாரம் துண்டிக்கப்பட்டதன் காரணம் என்ன? […]