கோடநாடு விவகாரம் தொடர்பாக கனகராஜின் உறவினரை 5 நாட்கள் விசாரிக்க உதகை நீதிமன்றம் அனுமதி. கோடநாடு கொலை,கொள்ளை தொடர்பான வழக்கு இன்று உதகை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.இதில்,முதன்மை குற்றவாளியான சயான்,வாளையாறு மனோஜ் உள்ளிட்டோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.இந்த வழக்கு விசாரணையின்போது,காவல்துறையினர் கூடுதல் விசாரணைக்கு காலஅவகாசம் கேட்டனர். இதனையடுத்து,வழக்கு அடுத்த மாதம் 26 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில்,கோடநாடு கொலை,கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உயிரிழந்த கார் ஓட்டுனர் கனகராஜின் உறவினர் ரமேஷ் என்பவரை 5 நாட்கள் […]