கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 49 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழு அமைப்பு. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிபிசிஐடி எஸ்பி சிஎஸ் மாதன் தலைமையில் 49 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை அதிகாரியாக கோவை சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேற்கு மண்டல காவல்துறையில் இருந்து 3 ஆய்வாளர்கள், 5 உதவி ஆய்வாளர்கள். 36 காவலர்களும் உதவியாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கோடநாடு […]
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை ஆகஸ்ட் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை ஆகஸ்ட் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உதகை மகளிர் நீதிமன்றம். இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையார் மனோஜ், ஜித்தன்ஜாய், ஜம் சீர் அலி ஆகியோர் ஆஜரான நிலையில், விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை உதகை நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியங்களை கலைத்ததாக கைதான் இருவருக்கு வழங்கப்பட ஜாமீன் நிபந்தனையில் மாற்றம். கோடநாடு கொலை, கொள்ளை வழக்குகளில் 2 பேருக்கு வழங்கப்பட்ட்ட ஜாமீன் நிபந்தனைகளில் மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கனகராஜ் சகோதரர் தனபால், ரமேஷ் ஆகியோர் 1, 15-ம் தேதிகளில் சோலூர்மட்டம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று ஆணியிடப்பட்டுள்ளது. உதகையில் தங்கியிருந்து திங்கட்கிழமைதோறும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், நீலகிரி நீதிமன்ற அனுமதி […]
கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுக சாமியின் மகன் செந்தில் குமாரிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017-இல் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக,முக்கிய குற்றவாளி கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில்,கேரளாவைச் சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்து இருந்தனர்.இவர்கள் தற்போது ஜாமீனில் உள்ளனர். அதே சமயம், […]
கோடநாடு வழக்கு தொடர்பாக இரண்டாவது நாளான இன்றும் சயானிடம் தனிப்படை போலீசார் விசாரணை. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கோடநாடு வழக்கு தொடர்பாக கடந்தாண்டு ஜூலை மாதம் முதல் தனிப்படை போலீசார் நடத்தி வரும் மேல் விசாரணை தீவிரமடைந்து வருகிறது. கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017-இல் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக, முக்கிய குற்றவாளி கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், கேரளாவைச் சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேரை போலீசார் […]
கோடநாடு வழக்கு தொடர்பாக சயானிடம் இரண்டாவது முறையாக தனிப்படை போலீசார் விசாரணை. கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக குற்றச்சாட்டப்பட்டுள்ள சயானிடம் தனிப்படை போலீசார் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். அதாவது இந்த வழக்கு தொடர்பாக தற்போது விசாரிக்கப்படும் சயான் என்பவர் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவ இவரிடம் தனிப்படை போலீசார் இரண்டாவது முறையாக விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை காவலர் பயிற்சி மைதானத்தில் உள்ள அலுவலகத்தில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் […]
கோடநாடு வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனிடம் இன்று விசாரணை. கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனிடம் இன்று விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 2 நாட்கள் விசாரணை நடந்த நிலையில், இன்று 3வது நாளாக தனிப்படையினர் விசாரிக்கின்றனர். கோவை காவலர் பயிற்சி வளாகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் 2017 ஏப். 24-ம் தேதி கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. இதுதொடர்பாக […]
கோடநாடு, கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஜெயலலிதா உதவியாளரிடம் தனிப்படை போலீசார் விசாரணை. கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் கடந்த 5 ஆண்டுகளாக யார், யாரிடம் விசாரிக்கப்படாமல் இருந்தார்களோ, அவர்களை தற்போது தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுவரை சசிகலா, விவேக் ஜெயராமன், மேலாளர் நடராஜன், முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி, சஜீவன் உள்ளிட்ட 200 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று அதிமுக பிரமுகர் […]
நீலகிரி மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு கொலை,கொள்ளை சம்பவம் நிகழ்ந்தது.இது தொடர்பான வழக்கு உதகை நீதிமன்றத்தில் விசாரனையில் உள்ள நிலையில்,திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் வழக்கு விசாரணை தீவிரம் அடைந்தது. அதன்படி,இந்த வழக்கு தொடர்பாக சயான் மற்றும் வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு,அனைவரும் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர். இதனைத் தொடர்ந்து,கோடநாடு எஸ்டேட் பங்களாவில் என்னென்ன இருந்தன என்பதை நன்கு அறிந்தவர் என்பதன் அடிப்படையிலும், […]
கோடநாடு வழக்கில், அதிமுக பிரமுகர் சஜீவனின் சகோதரர் சிபியிடம் தனிப்படை போலீசார் விசாரணை. கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக பிரமுகர் சஜீவன் சகோதரர் சிபியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக சஜீவனிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று அவரின் சகோதரர் சிபியிடம் கோவை காவலர் பயிற்சி வளாகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. கோடநாடு கொள்ளையர்களை கூடலூர் சோதனை சாவடியில் இருந்து விடுவித்ததாக கூறப்படும் தகவலின் அடிப்படையில் சிபியிடம் விசாரணை நடைபெறுகிறது. […]
சிறையில் இருந்த காலத்தில் கோடநாடு பங்களாவின் பொறுப்பு இருந்தது என சசிகலாவிடம் தனிப்படை போலீசார் கேள்வி. கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக சென்னை தி.நகரில் உள்ள வீட்டில் வி.கே.சசிகலாவிடம் இரண்டாவது நாளாக இன்று மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது சசிகலாவிடம் தனிப்படை போலீசார் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சிறையில் இருந்த காலத்தில் கோடநாடு மங்களாவின் பொறுப்பு யாரிடம் இருந்தது என்றும் […]
கோடநாடு வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் மீண்டும் நாளை காலை 10 மணிக்கு விசாரணை தொடங்கும் என தகவல். கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக இன்று சென்னை தி.நகரில் உள்ள வீட்டில் சசிகலாவிடம் மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படை விசாரணை மேற்கொண்டது. கோடநாடு பங்களாவில் என்னென்ன இருந்தன என்பதை நன்கு அறிந்தவர் சசிகலா என்பதன் அடிப்படையிலும், பங்களா மேலாளர் நடராஜன் வாக்கு மூலத்தின் அடிப்படையிலும் அவரிடம் நீலகிரி எஸ்பி ஆஷிஷ் ராவத், ஏடிஎஸ்பி கிருஷ்ண […]
கோடநாடு கொலை,கொள்ளை வழக்கு தொடர்பாக சென்னை தி.நகரில் உள்ள வீட்டில் சசிகலாவிடம் மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படை விசாரணை மேற்கொண்டு வருகிறது. கோடநாடு பங்களாவில் என்னென்ன இருந்தன என்பதை நன்கு அறிந்தவர் சசிகலா என்பதன் அடிப்படையிலும்,பங்களா மேலாளர் நடராஜன் வாக்கு மூலத்தின் அடிப்படையிலும் அவரிடம் நீலகிரி எஸ்பி ஆஷிஷ் ராவத்,ஏடிஎஸ்பி கிருஷ்ண மூர்த்தி மற்றும் பெண் போலீசார் உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டு வருகின்ற நிலையில்,கடந்த இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக விசாரரணை நீடித்து வருகிறது. அதன்படி,100 க்கும் […]
உதகை:கோடநாடு கொலை,கொள்ளை வழக்கு விசாரணையை மார்ச் 25 ஆம் தேதிக்கு மாவட்ட நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு நிகழ்ந்த கோடநாடு கொலை,கொள்ளை, தொடர்பாக சயான் மற்றும் வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு,அனைவரும் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர். இந்நிலையில்,இவ்வழக்கு சம்மந்தமாக பல்வேறு திருப்பங்கள் வெளியாகியுள்ள நிலையில் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்மந்தமான வழக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.விசாரணைக்கு சயான், வாளையாறு மனோஜ் […]
தனிப்படை 3 மணி நேரம் விசாரணை நடத்திய நிலையில், விசாரணை முடிந்து விவேக் ஜெயராமன் வெளியேறினார். ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி 11 பேர் கொண்ட கும்பல் கோடநாடு பங்களாவில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். கொடநாடு கொலை வழக்கில் பெரிதாக முன்னேற்றம் இல்லாமல் இருந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி தமிழக அரசு தரப்பில் கொடநாடு வழக்கை மறுவிசாரணை […]
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் வாளையார் மனோஜ்-க்கு நிபந்தனை ஜாமின். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக குற்றம்சாட்டப்பட்டுள்ள சிறையிலுள்ள வாளையார் மனோஜுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு பேர் உத்தரவாத ஆவணங்களை நீதிமன்றத்தில் ஆஜராகி தாக்கல் செய்ததால் ஜாமின் வழங்கப்பட்டது. இரண்டு பேர் அளித்த உத்தரவாதத்தை ஏற்று மனோஜுக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. உதகையை விட்டு வேறு எங்கும் செல்லக்கூடாது, வாரம்தோறும் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டுமென நிபந்தனை வழங்கப்பட்டுள்ளது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கேரளாவில் உள்ள 8 பேரை வரவழைத்து விசாரிக்க காவல்துறை திட்டம். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜாமீனில் உள்ள சந்தோஷ், தீபு, சதீசன், உதயகுமார், ஜிஜின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ், பிஜின் குட்டி ஆகியோரிடம் விசாரிக்க நீலகிரி போலீசார் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே நேற்று கோடநாடு வழக்கு தொடர்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் உறவினர்களிடம் கோவையில் டிஜிபி அலுவலகத்தில் காவல் ஆய்வாளர் […]
தமிழகத்தின் முதல்வர் மீது கொள்ளை, கொலைக்கு காரணம் இவர்தான்.என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 2 வது வீடாக இருந்த கோடநாடு பங்களா கொள்ளை-கொலை விவகாரமானது விஸ்ரூபமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு தலைதூக்கியுள்ளது.இது குறித்து வீடியோ ஒன்றும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனது குடும்பத்தினருடன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களை சந்திப்பில் இந்த வீடியோ விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர் கோடநாடு […]
கோடநாடு கொலை-கொள்ளை விவகாரத்திற்கு காரணகர்த்தாவே முதல்வர் தான் என்று குற்றம்சாட்டிய இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டபட்டவர்களான சயன் மற்றும் மனோஜ் இருவரும் இந்த தகவலை தெரிவித்தனர்.இந்நிலையில் இவர்களை கைது செய்ததில் எதமிழக காவல்துறை எல்லையை மீறியுள்ளது ம்மேலும் இவர்கள் இருவரும் தீவிரவாதிகளா என்று..? கொந்தளிக்கிறார் தெகல்கா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் சாமுல் மேத்யூ. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த சாமுல் மேத்யூ சட்டவிரோதமாக சயனையும், மனோஜையும் தமிழக போலீசார் பிடித்து சென்றுள்ளனர்.இவர்கள் உடனடியாக தேடி கைது செய்யும் […]