இயக்குனர் கோபி நயினார் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர் ஆவார். இவர் இயக்கிய அறம் படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தில் அவர், மாவட்ட ஆட்சியராக நடித்துள்ளார். இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றது. மேலும், இந்த படத்துக்காக நயன்தாராவுக்கு விருதுகளும் கிடைத்தது. இந்நிலையில், இயக்குனர் கோபி நயினார் அறம் படத்தின் 2-ம் பாகத்தை இயக்கவுள்ளதாக செய்திகள் பரவி வந்தது. மேலும், இவர் நடிகை சமந்தாவை வைத்து புதிய படம் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.