சென்னை : தமிழ்நாட்டில் தற்போது 25 மாநகராட்சிகள் இருக்கின்றன. அதோடு, மேலும் 2 மாநகராட்சிகளை உருவாக்க இருப்பதாக, அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். அதன்படி, பெரம்பலூர், ராமநாதபுரம் ஆகிய நகராட்சிகள், மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படவுள்ளன. மேலும், தமிழ்நாட்டில் நகராட்சிகளின் எண்ணிக்கை 146ஆகவும், பேரூராட்சிகளின் எண்ணிக்கை 491ஆகவும் இருக்கும் எண்ணிக்கை உயர்த்தப்பட்ட பிறகு தமிழ்நாட்டில் 25 மாநகராட்சிகள் இருக்கும். நகராட்சிகளின் எண்ணிக்கையையும் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “திருச்செங்கோடு, உடுமலை, பழனி […]