சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உட்பட 850க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக செயற்குழுவில், முதல் தீர்மானமாக அண்ணல் அம்பேத்கரை நாடாளுமன்றத்தில் அவமதித்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், புயல் வெள்ள நிவாரணமாக ரூ.2,000 கோடி நிதி வழங்க மத்திய அரசுக்கு […]
சென்னை : தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு காய்ச்சல் காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது உடல்நிலை குறித்த தகவல்களை அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சற்று நேரத்தில் அறிக்கையாக வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர், சாதாரண காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருவதாகதகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : நவம்பர், டிசம்பர் மாதம் நெருங்குகிறது என்றாலே பருவமழையும் தமிழகத்தை நெருங்கிறது என்று முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டிய சூழல் தற்போது உள்ளது. ஏற்கனவே சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை வெள்ள மீட்புப்பணிகளில் ஈடுபடுத்தபடுவதற்கு 36 படகுகள் வாங்கப்பட்டுள்ளதாக சென்னை மேயர் பிரியா தெரிவித்திருந்தார். சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பருவமழை முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் குறித்து இன்று நகர்ப்புற உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில், ” 156 பேட்டரி […]
சென்னை : தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பில் உள்ள உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக துணை முதலமைச்சர் எனும் பொறுப்பில் அமரவைக்கப்படுவார் என்ற செய்தி அவ்வப்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் அமெரிக்க பயணம் மேற்கொள்ளவதற்கு முன் “துணை முதலமைச்சர்” குறித்த சந்தேகத்திற்கு விடை கிடைக்கும் என பலரும் எதிர்நோக்கி காத்திருந்தனர். ஆனால், அதுபற்றி எந்த அறிவிப்பையும் அறிவிக்காமல், முதலமைச்சர் தனது அமெரிக்க […]
சென்னை : வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று சென்னையில் 7 அமைச்சர்கள், 3 எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். தமிழகத்திற்கு அதிக மழைப்பொழிவை தரக்கூடிய வடகிழக்கு பருவமழையானது ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் ஆரம்பித்து ஜனவரியில் நிறைவுபெறும். குறிப்பாக கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் வங்கக்கடல் பகுதியில் உருவான மிக்ஜாம் புயல் பாதிப்பை பலரும் மறந்திருக்க மாட்டார்கள். மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் சென்னை (முழுவதும்), காஞ்சிபுரம், செங்கல்பட்டு, […]
சென்னை: துறை ரீதியிலான மானிய கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடத்துவதற்கு கடந்த ஜூன் 20ஆம் தேதி முதல் தமிழக சட்டப்பேரவை தொடங்கியது. இந்த பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது. இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் துறை ரீதியிலான கேள்விகளுக்கு மட்டும் அமைச்சர்கள் பதில் கூறாமல், பல்வேறு புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டனர். இதில் இன்று முக்கிய முன்வரைவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, புதுக்கோட்டை, காரைக்குடி, நாமக்கல் ஆகிய நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த கோரி அமைச்சர் கே.என்.நேரு நேற்று […]
திமுக கட்சியின் இளைஞரணி மாநாடு வரும் ஜனவரி 21ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளது. இதற்கான விழா ஏற்பாடுகள் வெகு தீவிரமாக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு நிகழ்வுகள் முந்தைய நாள் ஜனவரி 20ஆம் தேதி அன்று முதலே துவங்குகிறது. இது குறித்து திமுக இளைஞரணி தலைவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை தெரிவித்தார். தவழ்ந்து தவழ்ந்து செல்வதால் கால்வலி வருகிறது.! இபிஎஸ்-ஐ விமர்சித்த உதயநிதி.! அவர் கூறுகையில், கடந்த வருடம் […]
அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கூறியிருந்த நிலையில் அதற்கு ஒருவரை தவிர 12 பேர் சம்மதம் தெரிவித்துள்ளனர். தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யபட்டார். இந்த கொலை குற்றவாளிகள் இன்னும் கண்டறியப்படாமல் இருக்கின்றனர். சிறப்பு புலனாய்வு துறையினர் இந்த கொலை வழக்கை விசாரித்து வருகின்றனர். திருச்சி நீதிமன்றத்தில் இந்த வழக்கு […]
அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இதில் 9 பேர் இன்று நேரில் ஆஜராகி விட்டனர். அதில் 8 பேர் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புதல் அளித்துவிட்டனர். தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யபட்டார். இந்த கொலை குற்றவாளிகள் இன்னும் கண்டறியப்படாமல் இருக்கின்றனர். சிறப்பு புலனாய்வு துறையினர் இந்த […]
சென்னை சைதாப்பேட்டை பகுதியில் அமைச்சர்கள் வருவதை அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் அந்த சாலையை அவசர அவசரமாக சுத்தம் செய்து பிளீச்சிங் பவுடர் போட்டு பளபளக்க வைத்தனர். சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருவதால், பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்குவதும், அதனை வெளியேற்ற மழைநீர் வடிகால் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனை தமிழக அமைச்சர்கள் தொடர்ந்து மேற்பார்வையிட்டு வருகின்றனர். அதில், சென்னை சைதாப்பேட்டையில் தான் அந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சென்னை சைதாப்பேட்டையில் […]
மாநகராட்சி மேற்கொண்ட தீவிர நடவடிக்கையால், தற்போது சென்னையில் 16 சுரங்க பாதைகளில் மழை நீர் தேங்குவது தவிர்க்கபட்டுள்ளது. – அமைச்சர் கே.என்.நேரு தகவல். சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்கள் மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் தேங்கும் மழைநீரை வெளியேற்றும் பணிகள் ஆங்காங்கே தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் தலைநகர் சென்னையில் தேங்கும் மழைநீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் தொடர் பணியாற்றி வருகின்றனர். இது குறித்து அமைச்சர் கே.என்.நேரு நேரில் […]
தனது இருப்பை நிரூபிக்க ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டு வருகிறார். – நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு. நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், ‘ கடந்த வருடம் மழைநீர் தேங்கிய இடங்களில் தற்போது வடிகால் பணிகள் நடைபெற்றுள்ளதால், இந்தாண்டு மழைநீர் அதிகமாக தேங்கவில்லை. நேற்றிரவு முதல் மாநகராட்சி சார்பில் 19,500 பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு […]
சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தின் மேற்குத் தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு வெற்றி பெற்றதாக திருச்சியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதியன்று நடைபெற்றது.இதில்,திருச்சி மேற்குத் தொகுதியில் திமுகவின் முதன்மைச் செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு மீண்டும் போட்டியிட்டார்.அவரை எதிர்த்து அதிமுக சார்பில் வி.பத்மநாதன் போட்டியிட்டார். இந்த நிலையில்,நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையானது,இன்று காலை தொடங்கியுள்ள நிலையில் […]
இணையதள அவதூறுகள் – தந்திர அரசியல் ஆகியவற்றை உணர்ந்து, திமுகவினர் கருத்துகளைச் சொல்ல வேண்டும் என்று அக்கட்சியின் முதன்மை செயலாளர் கே.என். நேரு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுகவின் முதன்மை செயலாளர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில்,திராவிட முன்னேற்றக் கழகம் கடந்த எழுபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழின மேம்பாட்டுக்காகவும், தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும் தமிழ்நாட்டின் உயர்வுக்காகவும் பாடுபட்டு வரும் ஓர் இயக்கம். இது ஓர் அரசியல் கட்சி மட்டுமல்ல, சமூக மேம்பாட்டு இயக்கமும் ஆகும். நாட்டு மக்களின் மேன்மையையே […]