இதயமாற்று அறுவை சிகிச்சை துறையின் ‘BIG DADDY’! யார் இந்த மருத்துவர் கே.எம்.செரியன்?
சென்னை : மருத்துவர் செரியன் (Dr. Cherian) காலமானார் என்ற செய்தி தமிழ்நாட்டில் மற்றும் மருத்துவ சமுதாயத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யார் இந்த செரியன்? மருத்துவர் கே.எம்.செரியன் 1942-ஆம் ஆண்டு கேரளா மாநிலம் காயம்குளத்தில் பிறந்தவர். அவர், மருத்துவப் படிப்பை முடித்த பின்னர், 1970-ஆம் ஆண்டில் வேலூர் சிஎம்சி (Christian Medical College) மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சை பேராசிரியராக பணியாற்றினார். அதன்பிறகு, இதய அறுவை சிகிச்சை (Cardiac Surgery) துறையில் மேம்பாடு செய்ய பிரிட்டன் சென்றார். […]