தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது கடந்த சில வாரங்களாக பெய்து வருகிறது. பலவேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தற்போது வங்கக்கடல் பகுதியில் புதியதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் மேலும் மழை அதிகரிக்கும் என கூறி சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த நாட்களில் மழை தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், அரசு சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து வருவாய் , பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் பல்வேறு […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த மாதத்தை விட இந்த மாத தொடக்கத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது.இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்குவதும், அதனை சரி செய்யும் வேலைகளும் நடைபெற்று வருகின்றன. இந்த வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். Rain Alert: தமிழ்நாட்டில் […]
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம் அறிவிக்கப்படும் என அமைச்சர் விளக்கம். சென்னை எழிலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய வருவாய் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன், வடகிழக்கு பருவமழையால் இதுவரை ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விளக்கமளித்தார். அமைச்சர் கூறுகையில், வீடுகளுக்கு தண்ணீர் புகுந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.4,800 நிவாரணம் வழங்கப்படும். மழையால் குடிசை முழுவதுமாக இடிந்திருந்தால் ரூ.5,000 வழங்கப்படும். மழையால் குடிசை பகுதி அளவு இடிந்திருந்தால் ரூ.4,100 வழங்கப்படும். மழையால் கான்கிரீட் வீடு இடிந்திருந்தால் ரூ.95,000 […]
வடகிழக்கு பருவமழை ஆயத்தப் பணிகள் தொடர்பாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழக அரசு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை ஆயத்தப் பணிகள் தொடர்பாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது. தலைமைச்செயலகத்தில் நடக்கும் கூட்டத்தில் தலைமைச்செயலாளர் இறையன்பு உள்பட அனைத்து செயலாளர்களும் கலந்து கொண்டுள்ளனர். அனைத்துத்துறை செயலாளர்களுடனான ஆய்வுக்கூட்டம் முடிவடைந்தவுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனின் இத்தகைய அணுகுமுறை கண்டிக்கத்தக்கது என சீமான் அறிக்கை. மனு அளிக்க வந்த மண்ணின் மக்களை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் அலட்சியப்படுத்தி அவமதிப்பதுதான் சமூக நீதியா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஆதித்தொல்குடியான குறவர் சமூக மக்களின் உரிமைகளுக்காக ஆறு நாட்களாகப் பட்டினிப்போராட்டம் நடத்திய வனவேங்கைகள் கட்சியின் தலைவர் அன்புத் தம்பி இரணியன், தங்களது கோரிக்கைகள் குறித்தான மனுவை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்களிடம் அளிக்கச்சென்றபோது […]
முதியோர் உதவித்தொகைக்கு செல்போன் மூலம் விண்ணப்பிக்கும் முறை விரைவில் அறிமுகம் என அமைச்சர் அறிவிப்பு. தமிழக சட்டப்பேரவையில் வருவாய்த்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அனைத்து சான்றிதழ்களும் செல்போன் மூலம் பெரும் வசதியை இரண்டு ஆண்டுகளுக்குள் கொண்டு வருவோம் என அறிவித்தார். இதன்பின் பேசிய அவர், ஒரு சான்றிதழை குறிப்பிட்ட நாட்களுக்குள் கொடுக்க வேண்டும் என்ற வரையறையை கொண்டு வர வேண்டுமென நினைக்கிறேன். சாதிச் சான்றிதழை […]
பெண்களை மையப்படுத்தித்தான் நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன என்று வருவாய்த்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக திமுக பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தது. இதில், குறிப்பாக குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000, நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், கொரோனா நிவாரண நிதி ரூ.4 ஆயிரம், ஆகிய வாக்குறுதிகள் மக்களை கவரும் வகையில் இருந்தது. சட்டமன்ற தேர்தல் வெற்றியை தொடர்ந்து திமுக தலைவர் முக ஸ்டாலின், புதிய முதல்வராக பொறுப்பேற்ற முதல் நாளே, கொரோனா நிவாரண […]