சென்னை : மத்திய அரசு மதுரை மாவட்டம், மேலூர் அருகேயுள்ள நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், இதற்கு தமிழகத்தில் இருந்து பலத்த எதிர்ப்புகள் கிளம்பியது. குறிப்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி என பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து இருந்தார்கள். இதனையடுத்து, நேற்றைய தினம் தமிழக சட்டமன்றத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த சூழலில், டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்யவலியுறுத்தி மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை […]
சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து பயணிகளின் குறைகளை கேட்டறிந்தார். மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி இன்று சென்னை வந்துள்ளார். இங்கு வடபழனியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெட்ரோ பணிகள் குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், மெட்ரோ ரயிலில் பயணித்து சக பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.மேலும், மெட்ரோ பணிகளுக்காக தமிழக அரசு கூடுதல் நிதி கேட்டுள்ளது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக குறிப்பிட்டு பேசினார். அதற்கடுத்ததாக சென்னை […]
டெல்லியில் வன்முறை நடைபெற்று வரும் நிலையில் ஹைதராபாத்தில் மத்திய உள்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அசாதுதீன் ஒவைசி குறித்து கூறுகையில், “ஒரு லட்சம் ஓவைசிகளால் கூட CAA ஐ திரும்பப் பெற வைக்க முடியாது” என்று கூறினார்.CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களைத் தூண்டுவதற்காக ஓவைசி மற்றும் அவரது கட்சி பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிட்டதாகவும் தெரிவித்தார்.
இதுவரை 155 ஐஎஸ் இயக்க உறுப்பினர்களை என்ஐஏ அமைப்பு கைது செய்துள்ளது என்று உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி பேசினார் .அப்போது அவர் பேசுகையில், நாடு முழுவதும் இதுவரை 155 ஐஎஸ் இயக்க உறுப்பினர்களை என்ஐஏ அமைப்பு கைது செய்துள்ளது.பல்வேறு மாநிலங்களில் இளைஞர்கள் பலர், ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்துள்ளதாக மத்திய, மாநில பாதுகாப்பு அமைப்புகளின் கவனத்திற்கு வந்துள்ளது.இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.