கிருஷ்ணகிரி : வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவும், அதிமுக துணை பொதுச்செயலாளருமான கே.பி முனுசாமி, இன்று தனது தொகுதிக்குட்பட்ட சூளகிரி வட்டம் காமன்தொட்டி பகுதியில் மக்கள் நல திட்டத்தை தொடங்கி வைக்க சென்றிருந்தார். அங்கு மத்திய அரசு திட்டத்தின் கீழ் அப்பகுதியில் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையில் கலந்து கொள்ள வந்திருந்தார். அப்போது, அங்கிருந்த திமுகவினர் கே.பி.முனுசாமி திட்டத்தை தொடங்கி வைக்க எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் அங்குள்ள அதிமுகவினர், திமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை […]
கிருஷ்ணகிரி: தமிழகத்தில் கீழடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அகழ்வாராய்ச்சி பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த அகழ்வாராய்ச்சி பணிகளில் பல்வேறு பண்டையகால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருகிறது. அப்படி கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சி பணிகள் குறித்து தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானூர் அகழாய்வில் தமிழி எழுத்துப் பொறிப்புக்கொண்ட பானை ஓடுகள் கண்டெடுப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானூர் அகழாய்வுத்தளத்தில் புதிய கற்காலப்பண்பாட்டைக் […]