பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6 நாடு முழுவதும் பதற்றமான நாளாக ஆண்டு தோறும் கருதப்படுகின்றது இந்நாளை முஸ்லிம்கள் கருப்பு தினமாக அனுசரித்து வருகின்றனர் இந்நாளில் இஸ்லாமிய சகோதர்கள் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை ஆண்டு தோறும் நடத்துவது வழக்கம் .அதனால் டிசம்பர் 5ம் தேதி முதலே போலீசார் தீவிர ரோந்துபணியில் ஈடுபடுவர் .இதன் காரணமாக டிசம்பர் 6 என்றாலே போலீசாருக்கும் மக்களுக்கும் பதற்றத்தை ஏற்படுத்தும் . இப்படி ஒரு மிகப்பெரிய பதற்றமான நாளில் பட்டியல் […]
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி போலி சாதி சான்றிதழ் பெற்றுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமிக்கு நோட்டீஸ் அனுப்ப, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலியைச் சேர்ந்த சிவஜெயப்பிரகாஷ் என்பவர் தொடர்ந்துள்ள பொதுநல வழக்கில், தான் தேவேந்திர குலத்தைச் சேர்ந்தவர் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி போலி சாதிச்சான்றிதழ் பெற்றுள்ளதாகவும், ஆனால், அவர் அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவர் என்று அவர் தொடுத்த வழக்கில் தெரிவித்துள்ளார். கிருஷ்ணசாமி பெற்றுள்ள சாதி சான்றிதழை ரத்து […]