சென்னை: அணு ஆயுத உற்பத்தி மற்றும் சோதனையை வடகொரியா அரசு அதிகரித்து வருகிறது. ராணுவம், பாதுகாப்பு, அணு ஆயுதம் என உலக நாடுகள் உற்றுநோக்கும் வகையில் அடுத்தடுத்த நகர்வுகளை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது வடகொரியா. அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் வழிகாட்டுதலின் பெயரின் ஏற்கனவே 2023 மார்ச் மாதம் முதல் ‘ஹெயில்’ எனும் கடலுக்கு அடியிலான அணுஆயுத சோதனையை அந்நாட்டு அரசு மேற்கொண்டது. இனி அணு ஆயுத சோதனையை மேற்கொள்ள கூடாது என ஐநா […]
அமெரிக்கா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தினால், அத்துடன் கிம் ஜோங் உன் ஆட்சி முடிவுக்கு வந்து விடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. வடகொரியாவின் தொடர்ச்சியான ஏவுகணை ஏவுதலுக்கு பிறகு அமெரிக்கா வடகொரியாவை எச்சரித்துள்ளது. இது குறித்து அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் கூறியதாவது, அமெரிக்கா அல்லது அதன் நட்பு நாடுகளுக்கு எதிராக எந்தவொரு அணுசக்தி தாக்குதலையும் வடகொரியா செயல்படுத்தினால் அதோடு கிம் ஜாங் உன் ஆட்சி முடிவுக்கு வரும் என்று கூறினார். இது ஏற்றுக்கொள்ள […]
வட கொரிய தலைவர் கிம் ஜாங், தனது நாடு ஒருபோதும் அதன் அணு ஆயுதங்களை கைவிடாது என்று அறிவித்துள்ளார். வட கொரிய மக்களின் பாதுகாப்பை அச்சுறுத்தும் நிலை அல்லது நாட்டின் மீது தாக்குதல் ஏற்பட்டால், அணு ஆயுதங்களை “உடனடியாக” பயன்படுத்த இராணுவத்திற்கு அங்கீகாரம் அளிக்கும் சட்டத்தை நிறைவேற்றியது என்று கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று இச்சட்டத்தை நிறைவேற்றிய பின், மக்கள் சட்டமன்றத்தின் உரையில், “அணு ஆயுதக் கொள்கையை சட்டப்பூர்வமாக்குவதன் மிக முக்கியத்துவம், எங்கள் அணு […]
கடந்த 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் கொரோனா தீவிரமாக பரவிய நிலையில்,வடகொரியாவில் யாருக்கும் கொரோனா இல்லை என அந்நாட்டு அரசு தெரிவித்திருந்தது.குறிப்பாக,வட கொரியாவில் உள்ள 25 மில்லியன் மக்களில் யாருக்கும் தடுப்பூசி போடவில்லை என்று கூறப்படுகிறது.உண்மையில்,வடகொரியா அரசு சீனா, ரஷ்யா மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) ஆகியவற்றின் தடுப்பூசி சலுகைகளை நிராகரித்துள்ளது. இந்நிலையில்,இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு,வட கொரியாவில் முதல் கொரோனா வழக்கு பதிவாகியுள்ளது.இதனால்,வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்,கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக நாட்டின் […]
வடகொரியாவில் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளதால், 2025 வரை குறைவாக உணவு உண்ண வேண்டும் என அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவல் காரணமாக வட கொரியா நாடு பிற நாடுகளுடன் எல்லைக்கு சீல் வைத்து கொண்டது. மேலும், உணவுப் பொருட்கள் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக சார்ந்திருந்த சீன எல்லையையும் வடகொரியா மூடியது. இதனால் வட கொரியாவில் உணவுப் பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக ஒரு கிலோ வாழைப்பழம் இந்திய மதிப்பில் 3,300 […]
கிழிந்த மாடல் மற்றும் டைட்டான ஜீன்ஸ் பேண்ட் அணிவது, உடல்பாகங்களில் வளையங்கள் அணிவது போன்றவற்றிக்கு தடை விதித்து வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் உத்தரவிட்டுள்ளார். வடகொரிய தலைவர் தலைவர் கிம் ஜாங்-உன்,மேற்கத்திய தாக்கங்களைத் தடுக்க வினோதமான சட்டங்கள் அமல்படுத்துவதில் பெயர் பெற்றவர்.அந்த வகையில்,கிம் ஜாங்-உன் சமீபத்தில் கிழிந்த மாடல் மற்றும் டைட்டான ஜீன்ஸ் பேண்ட் அணிவது, உடல்பாகங்களில் வளையங்கள் அணிவது,ஸ்பைக் உள்ளிட்ட ஹேர் ஸ்டைல் வைப்பது போன்றவை ‘முதலாளித்துவ வாழ்க்கை முறை’ மற்றும் இளைஞர்கள் மீதான […]
யார் ஆட்சியில் இருந்தாலும் பரவாயில்லை. அமெரிக்கா தான் எங்களின் மிகப்பெரிய எதிரி என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். உலகின் மிக தனிமையான நாடுகளில் ஒன்று, வடகொரியா. அந்நாட்டின் அதிபராக இருக்கும் கிம் ஜாங் உன், உலகின் மிக சக்திவாய்ந்த மனிதராக கருதப்படுகிறார். வடகொரியாவின் அனு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளுக்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதையும் மீறி, பல்வேறு அணு ஆயுத சோதனைகளில் வடகொரியா நடத்தி வருகின்றது. […]
கடந்த சனிக்கிழமை வடகொரியாவில் ஆளும் தொழிலாளர் கட்சியின் 75-வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, இராணு அணி வகுப்பு நடைபெற்றது. இந்த இராணுவ அணி வகுப்பு நிகழ்ச்சியில் பேசிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், நாட்டு மக்கள் வானத்தை விட உயரமாகவும், கடல் போன்று ஆழமாகவும் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். நான் உங்களுக்கு ஒன்றும் செய்யவில்லை, இதற்காக மிகவும் வருந்துகிறேன். வெள்ள பாதிப்பிலிருந்து மக்களை மீட்கவும், கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டதற்காகவும் ராணுவத்தினருக்கு […]
கொரோனா பரவலை தடுக்க சீனா எல்லை வழியாக வடகொரியாவிற்குள் நுழைபவர்களை சுட்டுத் தள்ளுமாறு வடகொரிய அதிபர் கிம் உத்தரவிட்டுள்ளார். உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கோடி வரும் நிலையில், அதனை தடுக்கு பல நாடுகளில் தடுப்பூசிகள் கண்டுபிடித்து, அதனை சோதனை செய்தும் வருகின்றனர். ஆனால், வடகொரியாவில் கொரோனா குறித்த எந்தொரு தகவலும் அந்நாட்டு அரசு வெளியாகுவதில்லை. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை பார்த்தல் சுட்டுத் தள்ளுமாறு அந்நாட்டு அதிபர் கிம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் […]
கிம் ஜாங் உன் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். அவரை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட் செய்துள்ளார். கடந்த சில தினங்களாக வடகொரிய அதிபர் கிம் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாகவும், அவரின் உடல்நிலை தற்பொழுது கவலைக்கிடத்தில் உள்ளதாகவும், தெரிவித்து வந்தனர். மேலும், பொது இடங்களில் அவர் தென்படாததால், அவர் இறந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால் அதனை பொய் என நிருப்பித்து, அவர் ஒரு தொழிற்சாலையை திறக்கும் புகைப்படம் வெளியானது. இதனையடுத்து, அதுமட்டுமின்றி, அதிபர் […]
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்க்கு கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக அந்நாட்டு முன்னாள் அதிபரின் ஆலோசகர் சாங் சாங்- மின் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக வடகொரிய அதிபர் கிம் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாகவும், அவரின் உடல்நிலை தற்பொழுது கவலைக்கிடத்தில் உள்ளதாகவும் பல செய்திகள் வெளியானது. மேலும் அதிபர் கிம் ஜாங் உன், அவரின் ஆட்சி அதிகாரத்தை அவரின் தங்கையிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும், அவரின் தங்கை ஆட்சியை நிர்வகித்து வந்ததாகவும் தகவல்கள் வெளியானது. இந்தநிலையில் அதிபர் கிம்மின் உடல்நிலை […]
வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் வட Hwanghae மாகாணத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த கிராமத்திற்கு ஆய்வு செய்தார். North Hwanghae Province பகுதிற்கு ஆய்வு மேகொண்டபோது, கிம் தனது சிறப்பு தானியங்களை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுப்பவும், சேதமடைந்த இடங்களை மீண்டும் கட்டியெழுப்ப சிமென்ட் போன்ற தேவையான பொருட்களைப் பயன்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் மருந்துகள் மற்றும் பிற தேவைகளை விரைவாக வழங்க கிம் உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் […]
உலகளாவிய சுகாதார நெருக்கடி இருந்தபோதிலும், கொரோனா பரவலை நாங்கள் முற்றிலும் தடுத்துள்ளோம். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து, மக்களை காப்பாற்ற ஒவ்வொரு நாட்டு அரசும் பல நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் இதுகுறித்து கூறுகையில், உலகளாவிய சுகாதார நெருக்கடி இருந்தபோதிலும், கொரோனா பரவலை நாங்கள் முற்றிலும் தடுத்துள்ளோம் […]
தென்கொரியா-வடகொரியா இரு நாடுகளுக்கு இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. தென்கொரியா-வடகொரியா இரு நாடுகளுக்கும் இடையே இருந்த பனிப்போர் கடந்த 2018-ஆண்டு தான் முடிவுக்கு வந்தது.அதனை வெளிப்படுத்தும் விதமாக இரு நாட்டு அதிபர்களும் எல்லையை கடந்த நட்பை வெளிப்படுத்தினார்கள்.தொடர்ந்து இரு நாடுகளும் நட்பு பாராட்டி வந்த நிலையில் தற்போது அதில் உரசல் ஏற்பட்டுள்ளது. தென் கொரியா-வடகொரியா இடையே கடந்த ஒரு மாதமாக மோதல் போக்கு உருவாக்கி வருகிறது.வடகொரியாவிற்கு எதிராக துண்டு பிரசுரங்கள் விநியோகித்ததால் இந்த மோதல் உருவாகியுள்ளது.இரு தரப்பு […]
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தியதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங்கைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பாராட்டியுள்ளார். சீனா உஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் சுமார் 200 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், அமெரிக்கா, ஐரேப்பிய நாடுகளில் கோரத்தாண்டம் ஆடி வருகிறது. உலகளவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 39,48,089 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 2,71,725 ஆகவும் உள்ளது. மேலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை […]
வடகொரிய அதிபர் கிம்மை பார்த்ததில் மகிழ்ச்சியடைந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். வடகொரியாவில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ஆம் தேதி கிம் ஜாங்கின் தாத்தாவின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.இந்த விழாவில் நாட்டின் உயரதிகாரிகள் அனைவரும் கலந்து கொள்வது வழக்கம்.ஆனால் இந்த ஆண்டு விழாவில் கிம் கலந்து கொள்ளவில்லை.இதன் பின்னர் தொடர்ந்து அவரை பார்க்க முடியவில்லை அவருக்கு மதுப் பழக்கம், புகைப்பிடிப்பது, உணவுப் பழக்கம் உள்ளிட்டவற்றால் இதயத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சமீபத்தில் செய்து கொண்ட அறுவை சிகிச்சையால் […]
பல்வேறு வந்ததிகளுக்கு மத்தியில் பொது நிகழ்ச்சியில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பங்கேற்றுள்ளார். வடகொரிய அதிபராக இருந்து வருபவர் கிம்ஜாங்.ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ஆம் தேதி கிம் ஜாக்கின் தாத்தாவின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.இந்த விழாவில் நாட்டின் உயரதிகாரிகள் அனைவரும் கலந்து கொள்வது வழக்கம்.ஆனால் கடந்த 15-ஆம் தேதி நடைபெற்ற விழாவில் கிம் கலந்து கொள்ளவில்லை. இது பெரும் விவாதத்தை கிளப்பியது. அவருக்கு மதுப் பழக்கம், புகைப்பிடிப்பது, உணவுப் பழக்கம் உள்ளிட்டவற்றால் இதயத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக […]
கிம் உயிருடன் இருக்கிறார் என்று வடகொரியா முன்னாள் தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் பொது இடங்களில் தலை காட்டாமல் உள்ளார். இதனால் அமெரிக்க உளவுத் துறையை சந்தேகத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து கிம் ஜாங் உன் உடல்நிலை மோசமாக உள்ளதாகவும், இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக பல செய்திகள் இணையத்தில் உலா வந்தன. கிம் ஜாங் உன் கொரோனா வைரசால் தனிமைப்படுத்தப் பட்டிருக்கலாம் என அல்ஜஜீரா செய்தித் […]
தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன்னின் பாதுகாப்பு சிறப்பு ஆலோசகர் மூன் சுங்-இன் , அதிபர் கிம் ஜாங் உன் “உயிருடன் இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் பொது இடங்களில் தலை காட்டாமல் உள்ளார். இதனால் அமெரிக்க உளவுத் துறையை சந்தேகத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து கிம் ஜாங் உன் உடல்நிலை மோசமாக உள்ளதாகவும், இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக பல செய்திகள் உலா வந்தன. கிம் ஜாங் […]
வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்து வெளிவந்த தகவல்கள் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகிறார். வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு புகைப்பிடிக்கும் வழக்கம் மற்றும் உடல்பருமனால் இதய நோயால் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் ஏப்ரல் 12ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் கிம் ஜாங் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கடந்த 15ம் தேதியன்று வடகொரியாவின் தந்தை மற்றும் கிம் […]