உலகமே எதிர்பார்த்த வரலாற்றுச் சிறப்பு மிக்க அமெரிக்கா- வடகொரியா அதிபர்களுடனான சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. 65 ஆண்டுகால கொரிய போர் முடிவுக்கு வந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் இடையே சிங்கப்பூரில் வரும் ஜூன் 12ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறுவதாக முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், அமெரிக்க துணை அதிபர் மைக்பென்ஸ் அறியாமையிலும், முட்டாள்தனமாகவும் கருத்துக்களை தெரிவித்திருப்பதாக வடகொரியா குற்றம்சாட்டியது. இதற்கு பேட்டி ஒன்றில் […]
வடகொரியாவுக்கு இனி அணு ஆயுத சோதனைகளோ கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை சோதனைகளோ தேவையில்லை என்று அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் அறிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு உடனடியாக சோதனைகளை நிறுத்துவதாகவும் கிம் ஜோங் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் கொரிய கடல் பகுதியில் அமெரிக்கப் படைகளின் போர் ஒத்திகைகளுக்கு கடந்த காலங்களில் ஆட்சேபம் தெரிவித்து வந்த கிம் ஜோங், தற்போது அணு ஆயுத சோதனைகளை கைவிடுவதாக அறிவித்துள்ளார். ஏவுகணை மற்றும் அணு […]
வடகொரிய நாட்டின் நிறுவனர் கிம் இல் சங்-ன் பிறந்த நாளை முன்னிட்டு வண்ணமயமான வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. தற்போதைய அதிபர் கிம் ஜோங் உன்-ன் தாத்தாவும், வடகொரிய நாட்டை தோற்றுவித்தவருமான கிம் இல் சங்-ன் பிறந்த நாளை அந்நாட்டினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அரசு சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. தலைநகர் பியாங் யாங்கில் ஏராளமான பொதுமக்கள் முன்னிலையில் வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.