சென்னையில் பேருந்து போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு சென்னை புறநகர் பகுதியில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. இதற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வர தாமதமாவதால் பயணிகள் அவதிக்கு உள்ளாவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றசாட்டை முன்வைத்து வருகின்றனர். இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து குற்றசாட்டுகளை முன்வைத்தனர். அந்த கேள்விக்கு அமைச்சர் சேகர் பாபு விரிவான விளக்கத்தை அளித்தார். அப்போது […]
மீண்டும் கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. நீதிமன்ற அனுமதியை தொடர்ந்து இன்று இரவு முதல் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் அருகே உள்ள புக்கிங் அலுவலகங்களில் இருந்து பயணிகள் ஏறிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் கட்டி முடிக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை கடந்த டிசம்பர் 30ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். இதனை அடுத்து, […]
திமுக அரசின் நிர்வாகக் குளறுபடிகளால், பொதுமக்கள் அவதிக்குள்ளாவது தொடர்ந்து கொண்டிருக்கிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றசாட்டை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைத்தள பக்க பதிவில், கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்திருக்கும் இடத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு, எந்த வித முறையான ஏற்பாடுகளும் செய்யாமல், அவசரகதியில், பேருந்து நிலையத்தை சுமார் நாற்பது கிலோமீட்டர் தொலைவிலுள்ள கிளாம்பாக்கத்துக்கு மாற்றியது திமுக அரசு. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைத் திறந்து நாற்பது நாட்கள் கடந்தும், இன்னும் […]