சென்னை : தீபாவளியை முன்னிட்டு, பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளதால் சென்னை ஸ்தம்பித்துள்ளது. இன்று (அரைநாள்) முதல் நவ.3 வரை தொடர் விடுமுறை வருவதால், திருச்சி, மதுரை, நெல்லை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்ல மக்கள் தொடங்கியுள்ளனர் தீபாவளியைக் கொண்டாட சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து இன்று 4,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இதனிடையே, சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில் அரசுப் […]
சென்னை : வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில், போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில், இன்று (21/10/2024) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் போக்குவரத்துத் துறையை சார்ந்த அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திருக பணீந்திரரெட்டி, போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய […]
சென்னை : அக்டோபர் 31-ல் தீபாவளி கொண்டாடப்படும் நிலையில், சென்னை உள்ளிட்ட பிற நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்து பேசினார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் சிவசங்கர், வரும் அக்டோபர் 28ம் தேதி முதல் 3 நாட்களுக்கு வழக்கமான பேருந்துகளுடன் மொத்தமாக 14,016 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமென அறிவித்துள்ளார். அதன்படி, சென்னையில் […]
திமுக அரசின் நிர்வாகக் குளறுபடிகளால், பொதுமக்கள் அவதிக்குள்ளாவது தொடர்ந்து கொண்டிருக்கிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றசாட்டை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைத்தள பக்க பதிவில், கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்திருக்கும் இடத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு, எந்த வித முறையான ஏற்பாடுகளும் செய்யாமல், அவசரகதியில், பேருந்து நிலையத்தை சுமார் நாற்பது கிலோமீட்டர் தொலைவிலுள்ள கிளாம்பாக்கத்துக்கு மாற்றியது திமுக அரசு. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைத் திறந்து நாற்பது நாட்கள் கடந்தும், இன்னும் […]
சென்னை புறநகர் பகுதியில் புதியதாக திறக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இன்று புதிய காவல் நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் சேகர் பாபு கலந்து கொண்டிருந்தார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அடுத்தடுத்து செயல்படுத்தப்பட உள்ள புதிய திட்டங்கள் குறித்து அமைச்சர் செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை கூறினார். அவர் கூறுகையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் புதியதாக மலிவு விலையில் தரமான உணவகங்கள் அமைக்க அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். […]
கிளாம்பாக்கம் ரயில் நிலையம் 6 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படும் என ரயில்வே பொதுமேலாளர் தகவல் தெரிவித்துள்ளார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே, வண்டலூா் – ஊரப்பாக்கம் இடையே ரூ.20 கோடி செலவில் புதிய ரயில் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றனர். தற்போது, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே புதிதாக கட்டப்படவுள்ள ரயில் நிலைய பணிகள் 6 மாதங்களில் முடிவடையும் என ரயில்வே பொதுமேலாளர் தகவல் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், […]
ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதுமான வசதி இல்லாததால், கோயம்பேட்டில் இருந்து தான் ஆம்னி பேருந்துகளை இயக்குவோம் என்றும் அவ்வாறு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அவகாசம் தர வேண்டும் எனவும் உரிமையாளர்கள் தரப்பிலும் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், ஆம்னி பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே இயக்கப்பட வேண்டும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார். அதன்படி, நேற்று இரவு […]