அரியலூர் மாவட்டத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு 8 வயது சிறுமியை கடத்தி சென்று முத்தம் தந்த இளைஞருக்கு 17 ஆண்டு சிறை தண்டனை விதித்து மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது. பைக்கில் கடத்தி சென்று சிறுமிக்கு முத்தம் தந்த மாரிமுத்து என்ற இளைஞருக்கு ரூ.20,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அரியலூர் மகிளா நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடியில் சினிமா பாணியில் கடத்தலில் ஈடுபட்ட கும்பலை துரத்தி பிடித்த தூத்துக்குடி போலீசாரை, சம்பவ இடத்திற்கு நேரில் சென்று எஸ்பி பாராட்டு. தூத்துக்குடி மாவட்டத்தில் 2 பேரை காரில் கடத்திய கும்பலை சினிமா பாணியில் போலீசார் துரத்தி பிடித்து காரை சுற்றி வளைத்து 5 எதிரிகளை கைது செய்து, அந்த காரையும் பறிமுதல் செய்தனர். கடத்தல் கும்பலை துரத்தி பிடித்த போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.எல்.பாலாஜி சரவணன் அவர்கள் சுற்றி வளைத்து பிடித்த இடத்திற்கே […]
இன்றைய கால கட்டத்தில் தனியாக ஒருவர் வெளியில் செல்ல முடிவதில்லை. காரணம் “பயம்” தான். பட்ட பகலிலே நம்மை உயிரோடு புதைக்கும் அளவிற்கு இன்றைய சமூகம் மாறியுள்ளது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வன்முறை இப்படி பலவற்றையும் மக்கள் நிறைந்த இடங்களிலே கொஞ்சமும் பயமும் பதட்டமும் இல்லாமல் சில மனித மிருகங்கள் செய்து வருகின்றன. இப்படிப்பட்ட அபாயங்களில் இருந்து தனி நபர் பாதுகாப்போடு வாழ சில செயலிகள் உள்ளன. இவற்றில் மிக எளிமையான மற்றும் புதுமையான இந்த செயலி […]