மிஸ் பெலாரஸ் 2008 அழகியான ஓல்கா கிஷின்கோவா 42 நாட்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டார். கடந்த நவம்பர் மாதம் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது ஓல்கா கிஷின்கோவா கைது செய்யப்பட்டார். இவருக்கு 12 நாள் சிறைத்தண்டனை இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது. அவரது விடுதலைநாள் டிசம்பர் 11 ஆக இருந்தநிலையில், கூடுதலாக ஒன்பது நாட்கள் வழங்கப்பட்டதால் நேற்று விடுதலை ஆனார். ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு ஓல்கா கிஷின்கோவா விடுவிக்கப்பட்டார் என்று பெலாரஷ்யன் விளையாட்டு அறக்கட்டளை தெரிவித்துள்ளது. […]