காங்கிரசும், சமாஜ்வாதியும் இணைந்தால் கூட பாஜகவை வீழ்த்த முடியாது உத்தர பிரதேச துணை முதலமைச்சர் கேசவ பிரசாத் மௌரியா தெரிவித்தார். உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலையொட்டி சட்டசபை தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்கிடையில் கொரோனாவின் பரவல் காரணமாக தேர்தல் ஆணையம் பேரணிகள் மற்றும் பிரச்சாரத்திக்கான தடையை பிப்ரவரி 11 வரை நீட்டித்துள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் 10 தேதி நடைபெறுகிறது. […]
சேத்தன் சவுகானை நினைவுகூறும் விதமாக அவர் பெயரை ஒரு சாலைக்கு வைக்கவுள்ளதாக உத்தரபிரதேச மாநிலத்தின் துணை முதல்வர் அறிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் முன்னாள் அமைச்சர் மற்றும் கிரிக்கெட் வீரருமான சேத்தன் சவுகான் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, குருகிராமில் உள்ள மேடந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி உயிரிழந்தார். சேத்தன் சவுகான், சிவில் பாதுகாப்பு மற்றும் பிராந்தியா ரக்ஷக் தால் போன்றவற்றின் உத்தரபிரதேச அமைச்சராக இருந்தார். இவர் 1970-களில் கிரிக்கெட் […]