போரை நாங்கள் தொடங்கவில்லை…ஆனால் முடித்துவைப்போம் – ஹமாஸை எச்சரித்த இஸ்ரேல்!!

Hamas - PM Netanyahu

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே தொடர்ந்து 4வது நாளாக நடந்து வரும் போருக்கு மத்தியில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “இந்த போரைத் நாங்கள் தொடங்கவில்லை என்றும் ஆனால் முடித்துவைப்போம் என்றும் தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போரில் இன்றுடன் உயிரிழப்பு எண்ணிக்கை 1,600 தாண்டியது. இந்நிலையில், இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் தனது பதிவில், “இந்தப் போரை நாங்கள் விரும்பவில்லை, இது மிகவும் கொடூரமான மற்றும் காட்டுமிராண்டித்தனமான முறையில் எங்கள் மீது திணிக்கப்பட்டது. ஆனால், … Read more

இது போல் நடந்தால் பிணைக் கைதிகளை கொன்று விடுவோம்…இஸ்ரேலுக்கு மிரட்டல் விடுத்த ஹமாஸ்!

Hamas Hostages

கடந்த 7ம் தேதி முதல் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே நடைபெறும் உச்சக்கட்ட போரில், கடந்த மூன்றே நாட்களில் இரு தரப்பிலிருந்தும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,600-ஐ தாண்டியுள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் வாழும் பகுதிகளில் எச்சரிக்கை கொடுக்காமல், குண்டுகளை வீசினால் நாங்கள் வசப்படுத்தி வைத்திருக்கும் பிணைக் கைதிகளை கொன்றுவிடுவோம் என்று ஹமாஸ் அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. காசா பகுதிகளை கைவசப்படுத்த முயற்சி செய்து வரும் ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மக்களின் வீடுகளில் புகுந்து துப்பாக்கி முனையில் மிரட்டும், வீடியோக்களும் … Read more

4வது நாளாக இஸ்ரேல் – ஹமாஸ் உக்கிர போர்! பலி எண்ணிக்கை 1,600 கடந்தது.!

Israel - Hamas war

தொடர்ந்து 4வது நாளாக இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் உக்கிரமடைந்து வரும் நிலையில், இந்த போரில் இரு தரப்பிலிருந்தும் பலியானோர் எண்ணிக்கை 1,600 தாண்டியுள்ளது. இந்த சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது. இரு தரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட உலக நாடுகள் விரும்பும் நிலையில், அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. நேற்றைய தினம், காசா எல்லை முழுவதும் இஸ்ரேல் ராணுவ படைகளின் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவ அமைச்சர் தெரிவித்திருந்தார். “அப்பாவி இஸ்ரேலியர்களுக்கு எதிராக ஹமாஸ் நடத்திய … Read more

பரபரப்பு!! ஹமாஸ் தாக்குதலில் கேரள பெண் படுகாயம்!

Hamas attack kerla women

இஸ்ரேலில் பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த பெண் செவிலியர் ஒருவர், இந்தியாவில் வசிக்கும் தனது கணவருடன் வீடியோ காலில் பேசி கொண்டு இருக்கும்பொழுது, பாலஸ்தீனிய பயங்கரவாதக் குழுவான ஹமாஸ் நடத்திய தாக்குதலில் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பையாவூரைச் சேர்ந்த ஷீஜா ஆனந்த், ஏழு ஆண்டுகளாக இஸ்ரேலில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். ஷீஜாவின் கணவரும் அவர்களது இரண்டு குழந்தைகளும் இந்தியாவில் உள்ளனர், கணவர் புனேவில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக இஸ்ரேலில்  இஸ்ரேல் … Read more

கொரோனா உறுதி செய்யப்பட்ட கேரள பெண்.! ஆம்புலன்ஸில் அமர்ந்து தேர்வெழுதிய நெகிழ்ச்சி சம்பவம்.!

கேரளாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர் ஆம்புலன்ஸில் அமர்ந்து தேர்வெழுதிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள பொது சேவை ஆணைய வேட்பாளரான கோபிகா கோபன் கடந்த சில நாட்களாக உதவி பேராசிரியர் பதவிக்கு அதாவது பி.எஸ்.சி தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்தார். அந்த தேர்வு முதலில் ஜுலை மாதம் நடத்த திட்டமிட்டிருந்த வேளையில் கொரோனா தாக்கம் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. அதனையடுத்து, பி.எஸ்.சி தேர்வு நவம்பர் 2-ஆம் தேதி நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே கடந்த சனிக்கிழமை கோபிகா … Read more