கேரள வெள்ளத்துக்கு 14 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிப்படைந்துள்ளனர் இந்த நிலையில் மத்திய அரசு சார்பில் 600 கோடி நிவராண நிதியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது மேலும் நாட்டு மக்கள் அனைவரிடம் இருந்தும் எண்ணிலடங்க உதவிகளும்,அத்தியவாசிய பொருட்கள் அனுப்பபட்டு வரும் இந்த நிலையில் கேரள வெள்ள நிவாரணத்திற்கு நடிகர் லாரன்ஸ் ரூ.1 கோடி நிதி வழங்க முடிவு செய்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார். DINASUVADU
திருச்சியை சேர்ந்த, எம்.பி.ஏ., மாணவி, தன் இன்சூரன்ஸ் முதிர்வு பணத்தை, கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவியாக அளித்து அசத்தியுள்ளார்.திருச்சி சாரநாதன் இன்ஜினியரிங் கல்லுாரியில், எம்.பி.ஏ., முதலாண்டு படித்து வருகிறார். நேற்று காலை திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு, தன் தந்தையுடன் வந்த ஸ்ருதி, கலெக்டர் ராசாமணியை சந்தித்து, தன், எல்.ஐ.சி., பாலிசியில் கிடைத்த, 80,ஆயிரத்து 74 ரூபாயை, கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க விரும்புவதாக கூறினார்.அவரை பாராட்டிய கலெக்டர், அவர் கொடுத்த பணத்தை, கேரள நிவாரண […]
கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுத்தம் செய்யும் பணிக்காக வார்டுகளுக்கு நிதி அறிவித்துள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன் அதன்படி மாநகராட்சிமற்றும் நகராட்சிகளில் சுத்தம் செய்ய ஒவ்வொரு வார்டுக்கும் தலா ரூ.50,000 எனவும் பஞ்சாயத்து வார்டுகளுக்கு தலா ரூ.25,000 நிதி வழங்கப்படும் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்
கேரளாவில் மக்கள் துன்பப்பட்டு வரும் சூழலில் அவர்களுக்கு நாட்டின் அனைத்து மக்களும் உதவி வருகின்றனர்.அவர்களின் துயரில் பங்கு கொண்டு அனைவரும் ஒரு உதவி செய்து வருகின்றனர்.அந்த வகையில் தற்போது கேரளா மழை வெள்ள நிவாரண பணிக்காக தூத்துக்குடி மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் ரூ.1 லட்சம் மதிப்புள்ள மருந்து பொருட்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகள் அடங்கிய பார்சல்கள் வழங்கப்பட்டது. DINASUVADU
காஞ்சிபுரம் நகர கேபிள் டிவி ஆபரேட்டர் சங்கம் சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு 500 கிலோ அரிசியை வழங்கினர் இதனை கேரள மக்களுக்கு அனுப்பி உதவிடக்கோரி மாவட்ட ஆட்சியர் பொன்னையாவிடம் நிவாரண பொருட்களை அளித்தனர். DINASUVADU