தமிழகம்,கேரளா,தெலுங்கானா,மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் எரிபொருள் மீதான வாட் வரியைக் குறைக்காததன் காரணமாகவே பெட்ரோல்,டீசல் விலை அதிகரித்துள்ளது என்று நேற்று முன்தினம் நடைபெற்ற அனைத்து மாநில முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றம் சாட்டியிருந்தார். பெட்ரோல் 200%;டீசல் 500%: இதனையடுத்து,தமிழக நிதியமைச்சர் பிடிஆர்,கடந்த 8 ஆண்டுகளில் கலால் வரியானது பெட்ரோல் மீது சுமார் 200% அளவுக்கும்,டீசல் மீதான கலால் வரி 500% அளவுக்கும் மத்திய அரசால் மேலும் உயர்த்தப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டி,கடந்த 2014 ஆம் […]
இன்று இரண்டாவது முறையாக கேரள முதல்வராக பதவியேற்கிறார் பினராயி விஜயன். கேரளாவில், ஏப்ரல் 6-ம் தேதி தேர்தலில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 140 தொகுதிகளில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில், இன்று கேரளாவில் பினராயி விஜயன் அவர்கள், முதல்வராக இரண்டாவது முறையாக பதவி ஏற்கிறார். திருவனந்தபுரத்திலுள்ள விளையாட்டரங்கில் இந்த பதவியேற்பு விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. முதல்வருடன் […]
வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜக எம்.எல்.ஏ. எதிர்ப்பு தெரிவிக்காததால் கேரள பாஜக அதிர்ச்சியடைந்துள்ளது. 3 புதிய வேளாண் சட்டங்களை உடனடியாக ரத்து செய்யக் கோரி கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அம்மாநில சட்டசபையில் தீர்மானத்தை நிறைவேற்றினார். சபையின் சிறப்பு கூட்டத்தில் குரல் வாக்கு மூலம் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் பி.ஸ்ரீராமகிருஷ்ணன் தெரிவித்தார். கேரள சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜகவின் ஒரே ஒரு எம்எல்ஏ தீர்மானத்தை எதிர்க்கவில்லை. தீர்மானத்தின் சில வாசகங்களை […]
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அம்மாநில சட்டசபையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளார். விவசாயிகளின் பிரச்சினை குறித்து விவாதிப்பது தொடர்பாக கூட்டப்பட்ட சிறப்பு அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.3 புதிய வேளாண் சட்டங்களை உடனடியாக ரத்து செய்யக் கோரி தீர்மானத்தை நிறைவேற்றிய பின் பினராயி விஜயன் பேசுகையில், வரலாற்றில் விவசாயிகளால் நடத்தப்பட்ட மிகச் சிறந்த போராட்டங்களில் ஒன்றாகும் என்று கூறினார்.நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்கள் “கார்ப்பரேட் சார்புடையவை” என்றும், விவசாயிகள் போராட்டத்தில் குறைந்தது 32 விவசாயிகள் […]