தமிழக முதல்வரை சந்தித்து பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளார். தனியார் ஹோட்டலில் தங்கி உள்ள தமிழக முதல்வரை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது முல்லை பெரியாறு, சிறுவாணி, நெய்யாறு உள்ளிட்டவை தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது, தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கேரளாவின் மலப்புரம் மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர், உதவி ஆட்சியர் உள்பட 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் கேரளாவில் விமானம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து கோழிக்கோடு விமான நிலையத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட மொத்தம் 22 அதிகாரிகள் கொரோனா பரிசோதனை சோதனை செய்தனர் சோதனை முடிவில் கொரோனா இருப்பது உறுதியானது. இந்நிலையில் மலப்புரம் மாவட்ட ஆட்சியர் கே.கோபாலகிருஷ்ணன் உட்பட 21 ஊழியர்களுக்கு இன்று கொரோனா பாசிடிவ் ஆகியுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த […]
மூணாறு ராஜமலை நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டோரை கேரள அரசு அரவணைக்கும் என்று தெரிவித்துள்ளார். ராஜமலை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அளித்த நிவாரணநிதி முதற்கட்டமானதுதான். மீட்புப்பணி முடிந்ததும் இழப்புகளை மதிப்பிட்டு பாதிக்கப்பட்டோருக்கு அடுத்தகட்ட உதவிகள் வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு வெளிநாட்டு நிதியை ஏற்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இயற்கை பேரிடர்களின் போது சர்வதேச நாடுகளின் நிதியை பெறுவதில்லை என்பது இந்தியா கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தாய்லாந்து கேரளாவுக்கு நிதி வழங்குவதாக தெரிவித்த நிலையில் இந்திய தூதர் ட்வீட்டரில் பக்கத்தில் தாய்லாந்துக்கு இதனை தெரிவித்துள்ளார். ஐக்கிய அமீரகம் சார்பில் கேரள வெள்ளத்துக்கு 700 கோடிஅளித்தது .கேரளாவிற்கு 2,600 கோடி வேண்டும் என இழப்பீட்டு தொகை மத்திய அரசிடம் கேட்டார் அம்மாநில […]