எத்தனை விழிப்புணர்வுகள், எத்தனை கடுமையான சட்டங்கள் , எத்தனை குற்றவழக்குகள், எத்தனை தற்கொலைகள் நிகழ்ந்தாலும், வரதட்சணை கொடுமை என்பது அவ்வப்போது அரங்கேறி வருகிறது. இதனால் மனமுடைந்து மணப்பெண் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இதில் கொடுமை என்னவென்றால் இந்த சம்பவத்தில் நன்கு படித்து சமூகத்தில் உயர் பொறுப்பில் இருப்பவர்களும் ஈடுபடுவது தான் . கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சை பிரிவில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார் […]