கேரளாவில் கோழிக்கோட்டில் நடந்த விமான விபத்து சம்பவம் கேலிகெட் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் படமாக உருவாகவுள்ளது. கேரளாவில் கோழிக்கோடு விமானநிலையத்தில் ஆகஸ்ட் 7ம் தேதி இரவு 10குழந்தைகள் உட்பட 190 பயணிகளை ஏற்றிச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கியது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணித்த 18 பேர் உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த நிலையில் தற்போது இந்த உண்மை சம்பவத்தை வைத்து மலையாளத்தில் படம் ஒன்றை உருவாக்கவுள்ளதாகவும், அதற்கு […]
கேரளா விமான விபத்தில் உயிரிழந்த அகிலேஷ் ஷர்மாவின் மனைவிக்கு வேலை வழங்க வேண்டும் என்று அவரது தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார். கேரளாவில் கோழிக்கோடு விமானநிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10குழந்தைகள் உட்பட 190 பயணிகளை ஏற்றிச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கியது. இந்த கோரி விபத்தில் விமானத்தில் பயணித்த 18 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் இணை விமானியான அகிலேஷ் குமார் . […]
துபாயிலிருந்து கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் பொழுது ஓடுபாதையில் நிற்காமல் சறுக்கி கொண்டு சென்று விபத்துக்குள்ளானது.இதில் பலியானோர் எண்ணிக்கை தற்பொழுது வரை 16 ஆக அதிகரித்துள்ளது . ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான விபத்துக்குப் பின்னர் கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்தின் வளாகத்திற்குள் தனியாக நின்று கொண்டிருந்த குழந்தையை அதிகாரிகள் மீட்டுள்ளனர் . விபத்து நடந்த இடத்திற்கு அருகே காணப்பட்ட அந்த சிறுமியுடன் யாரும் இல்லை. சிறுமியை கொண்டுட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக […]