சென்னை : கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டின் எல்லை மாவட்டங்களில் தொடர்ந்து மருத்துவ கழிவு குப்பைகள் கொட்டப்பட்டுள்ள நிலையில், இதனால் மக்களுக்கு பல்வேறு தொற்று நோய் பரவ வாய்ப்புள்ளதால் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் வேண்டுகோள் வைத்து வருகிறார்கள். அந்த வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியதோடு திமுகவை விமர்சித்தும் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியிருந்தார். அதில் “கேரள முதல்வருடன் கைகுலுக்கி போட்டோஷூட் […]
சென்னை : கேரளாவின் திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையத்திலிருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவ கழிவுகள் திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி அருகே நடுக்கல்லுார், கோடகநல்லுார் பகுதிகளில் கொட்டப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கண்டனங்களை தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” தமிழ்நாட்டின் […]