திருவனந்தபுரம் : ஒட்டுமொத்த மலையாள சினிமா உலகையே புரட்டி போட்டுள்ளது ஹேமா கமிஷன் அறிக்கை. நடிகைகள், பெண் திரை கலைஞர்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லை, எம்.எல்.ஏ, மூத்த நடிகர்கள், நடிகர் சங்க முக்கிய நிர்வாகிகள் என பலரது பெயர் அடிபடவே கேரள திரையுலகம் மட்டுமின்றி தென் இந்திய திரையுலகமே ஆட்டம் கண்டுவிட்டது. ஹேமா கமிட்டி அறிக்கையை தொடர்ந்து நடிகைகளிடம் வாக்குமூலம் பெற்று போலீசார், பல முக்கிய பிரபலங்கள் மீது வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இப்படியான சூழலில், கேரளா […]
கேரளா: பள்ளி மாணவர்கள் அதிக எடை கொண்ட பாடப் புத்தகம் மற்றும் நோட்டு புத்தகங்கள் அடங்கிய புத்தக பைகளை கொண்டு செல்வதாக கேரளாவில் பெற்றோர்களின் கவலையாக உள்ளது என கேரள கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டி நேற்று (வெள்ளி) தெரிவித்தார். இது குறித்து மாநில அரசு ஆலோசித்து வரும் புதிய திட்டம் பற்றியும் அமைச்சர் சிவன்குட்டி நேற்று தெரிவித்தார். அவர் கூறுகையில், கேரளாவில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் புத்தக பைகள் எடை அதிகமாக […]
கேரளா: மத்திய அரசு பதிவேடு உள்ளிட்ட அனைத்து அரசு பதிவேடுகளிலும் கேரள மாநிலத்தின் பெயர் கேரளா (Kerala) என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை மாற்றி மலையாள சொல் வரும்படியாக கேரளம் (Keralam) என மாற்ற அம்மாநில அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. முன்னதாக கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி இதே கேரளா மாநில சட்டமன்றத்தில் மாநில முதல்வர் பினராயி விஜயன் இந்த தீர்மானத்தை கொண்டுவந்து நிறைவேற்றினார். பின்னர் அதனை மத்திய அரசுக்கு பரிந்துரைத்து அனுப்பி […]
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும். இந்த வருடம் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதனால் ஆரம்ப நாட்களில் பக்த்ர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்ததாலும், சாமி தரிசனம் செய்யாமல் பலர் சன்னிதானத்தில் இருந்ததாலும் கூட்ட நெரிசல் மிக அதிகமாக இருந்தது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தமிழகத்தில் இருந்தும் அதிகளவில் பக்தர்கள் செல்வதால் […]
ஒவ்வொரு வருடமும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நவ.16 ஆம் தேதி திறக்கப்பட்டு, டிச-25 ஆம் தேதி வரை தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. கோவில் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெறும் நிலையில், இந்த பூஜைகளில் கலந்து கொள்ள கடலென மக்கள் திரண்டு வருகின்றனர். சபரிமலைக்கு வருவதற்கு அரசு சில கட்டுப்பாடுகளை விதித்த போதிலும், கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக […]
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்கும் உச்சநீதிமன்ற உத்தரவை கேரள அரசு அமல்படுத்தியுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிக்காதது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதி அமர்வு கடந்த 2018ஆம் ஆண்டு அனைத்து வயது பெண்களையும் சபரிமலை ஐயப்பன் கோவில் தரிசனத்திற்கு அனுமதிக்கலாம் என தீர்ப்பு வழங்கினர். இதற்கு ஐயப்பன் பக்தர்கள் மத்தியில் எதிர்ப்பு இருந்தாலும், இரண்டு வருட கொரோனா கட்டுப்பாடுகள் என்பதாலும், […]
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பினை மறு ஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய நீர்வள ஆணையத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையினை எதிர்த்து திமுக அரசு மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தல். தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,மத்திய நீர்வள ஆணையத்தின் அறிக்கைக்கு கடும் எதிர்ப்பினைத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்றும்,இது மட்டுமல்லாமல் இதனை பிரதமர் மற்றும் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று மத்திய […]
முல்லைப் பெரியாறு அணை பழமையானது என்றும்,அதிக அளவில் தண்ணீர் தேக்கி வைத்தால் அணைக்கு சேதம் ஏற்படும் என்றும் கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். கேரள அரசுடனான நல்லுறவை பேணி பாதுகாக்கும் அதே வேளையில் முல்லை பெரியாறு பாசன விவசாய பிரதிநிகளுடன் கலந்து ஆலோசித்து தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட தேவையான அனைத்து நடவக்கைகளையும் தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். மேலும்,இது தொடர்பாக […]
லட்சத்தீவின் நிர்வாக அதிகாரி பிரஃ புல் படேல் கொண்டு வந்த சர்ச்சைக்குரிய புதிய சட்டங்களுக்கு இடைக்காலத்தடை விதித்து கேரளா அரசு உத்தரவிட்டுள்ளது. சுற்றுலாவுக்கு பெயர் போன ஒரு இடம் லட்சத்தீவு. இந்த லட்சத்தீவில் மத்திய அரசின் சார்பில் நடைமுறைப்படுத்தப்படும் நடவடிக்கைகள் அங்கு வாழும் மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை சிதைத்து, அவர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது. நாட்டின் மிகச் சிறிய யூனியன் பிரதேசமான லட்சத்தீவு தினேஷ்வர் சர்மா என்பவரால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. இவர் கடந்த 2020-ஆம் […]
கேரளாவில் இன்று மட்டுமே புதியதாக 65 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால், கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 2,161ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்பினை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு முயற்சிகளை கேரள அரசு முன்னெடுத்து வருகிறது. இருந்தாலும், நாளுக்கு நாள் கொரோனா தொற்று கேரளாவில் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இருந்தாலும், கேரளாவில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. கேரளாவில் இன்று மட்டுமே புதியதாக 65 பேருக்கு கொரோனா பாதிப்பு […]
கேரளாவில் பேருந்து போக்குவரத்தில் முதற்கட்டமாக மாவட்டத்திற்குள் மட்டும், பேருந்து போக்குவரத்து இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடுமுழுவதும் மத்திய மாநில அரசுகள் நான்காம் கட்ட ஊரடங்கை அமல்படுத்தின.மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தின் கொரோனா நிலவரம் பொறுத்து பேருந்து போக்குவரத்தை இயக்கி கொள்ளலாம் என மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, கொரோனாவில் இருந்து மீண்டு வரும் கேரளாவில் பேருந்து போக்குவரத்து முதற்கட்டமாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் மாவட்டத்திற்குள் மட்டும், பேருந்து போக்குவரத்து இயக்க […]
கேரளாவில் பேருந்து சேவை தொடங்க அரசு ஆலோசித்து வருவதாக, கேரளா போக்குவரத்து அமைச்சர் சுசீந்திரன் தகவல் தெரிவித்தார். கேரளாவில் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைக்கப்பட்டு விட்டது. தற்போது அம்மாநிலத்தில் கோரோவால் 630 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 130 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். 497 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடுதிரும்பியுள்ளார். இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு நான்காம் கட்ட ஊரடங்கை […]
கேரள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்க அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்ய செல்லலாம் என சென்றாண்டு செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை அடுத்து சென்ற ஆண்டு சில பெண்கள் கேரள காவல்துறையின் பலத்த பாதுகாப்புக்கு இடையில் சபரிமலைக்கு சென்று வந்தனர். இதனை தொடர்ந்து உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுக்கள் உச்சநீதிமன்ற தாக்கல் செய்யப்பட்டன. இந்த சீராய்வு மனுக்களை விசாரித்த 5 பேர் கொண்ட நீதிபதி அமர்வானது, 7 நீதிபதிகள் கொண்ட பெரிய நீதிபதி அமர்விற்கு […]
சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த சீராய்வு மனுக்கள் மீதான தீர்ப்பு 5 நீதிபதிகள் கொண்ட அமர்விலிருந்து 7 நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்றப்பட்டதால், இந்த உச்சநீதிமன்றம் சென்றாண்டு வழங்கியிருந்த அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பனை தரிசிக்கலாம் என்ற தீர்ப்புதான் தற்போது அமலில் இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் இந்தாண்டும் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க பெண் பக்தர்கள் வருகை இருக்கும். இதுகுறித்து கேரள சட்டத்துறை அமைச்சர் ஏ.கே.பாலன் கூறுகையில், சென்றாண்டே தீர்ப்பை அமல்படுத்த சில […]
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என சென்றாண்டு செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் போடப்பட்டன, அதனை 5 நீதிபதிகளில் 3 நீதிபதிகள் வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்ததால், 7 பேர் கொண்ட பெரிய அமர்வு தீர்ப்பு வழங்கும் வரை இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே வழங்கியுள்ள தீர்ப்பே அமலில் இருக்கும் என கூறப்பட்டது. இதனையடுத்து, 36 பெண்கள் […]