சபரிமலை அயப்பன் கோவிலில் ஒரு நாளைக்கு 1000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று நிபுணர் குழு கேரள அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. கொரோனா பரவி வரும் சூழலில் சபரிமலை கோவிலில் வழிகாட்டு நெறிமுறைகளுக்காக நிபுணர் குழு ஒன்றை கேரள அரசு அமைத்துள்ளது. இந்த குழுவின் அறிக்கையின் படி சபரிமலை கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜை காலங்களில் 1000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 2000 பக்தர்கள் வரை அனுமதிக்கப்படலாம். […]