திருவனந்தபுரம் : நடிகை பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக முதல்வர் பினராயி விஜயனிடம் நடிகரும், எம்எல்ஏவுமான முகேஷ் விளக்கம் அளித்துள்ளார். பிரபல மலையாள நடிகரும், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவுமான முகேஷ் மீது, கொச்சியில் உள்ள மரடு காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை ஒருவர் கொடுத்த புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற […]
கேரளாவில் நவ கேரள சதாஸ் என்ற யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. அதாவது கேரள மாநிலத்தில் அரசின் சாதனைகளை மக்களுக்கு நேரில் சென்று எடுத்துரைக்கும் வண்ணம் இந்த யாத்திரை நடைபெற்று வருகிறது. இதற்காக பேருந்துகளில் கேரள முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பயணித்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த மாதம் இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர் இந்த யாத்திரைக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், நேற்று பெரும்பாவூரில் இருந்து கொத்தமங்கலம் நோக்கிச் சென்று கொண்டிருந்த முதல்வர் பினராயி […]
லட்சதீவின் சீர்திருத்தங்களை எதிர்த்ததற்காக சைபர் தாக்குதலை சந்தித்த கேரள திரைப்பட நடிகர் பிரித்விராஜ் சுகுமாரனுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆதரவு தெரிவித்துள்ளார். லட்சத்தீவின் சீர்திருத்தத்திற்கு எதிராக ட்வீட் செய்த நடிகர் பிரித்விராஜ் மீது லட்சத்தீவின் வலது சாரிகள் சைபர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுகுறித்து சனிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், நடிகர் பிரித்விராஜ் வெளிப்படுத்திய உணர்வுகள் கேரள மக்களின் உணர்வு, பிரித்விராஜ் அதனை சரியாக வெளிப்படுத்தியுள்ளார் என்று அவருக்கு ஆதரவாக பேசியுள்ளார். நடிகர் […]
மூணாறு, நிலச்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடு கட்டித்தரப்படும். எனவும், நிலச்சரிவில் உயிருடன் மீட்கப்பட்டவர்களின் குழந்தைகளின் பள்ளிசெலவுகளை அரசே ஏற்கும் எனவும் கேரள முதல்வர் தெரிவித்தார். கேரளவில் பெய்த கனமழை காரணமாக மூணாறு, ராஜமலை பெட்டிமுடி பகுதியில் கடந்த 7ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் 20க்கும் மேற்பட்ட தொழிலார்கள் தங்கள் வீடுகளை இழந்தனர். இதில் 80 பேர் மண்ணில் புதையுண்டனர். 55 உயிரிழந்ததாகவும், 13 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்றுவருவதாகவும், தகவல் வெளியானது. இந்நிலையில், நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை […]
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 30 கிலோ தங்கம் கடத்தபட்ட வழக்கை பிரதமர் கவனத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். கடந்த ஜூலை 5ஆம் தேதி திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் ஐக்கிய அரபு நாட்டில் இருந்து வந்த விமானம் ஒன்றில் வந்திறங்கிய ஸ்வப்னா சுரேஷ் என்பவரிடம் சோதனை நடத்திய போது சுமார் 15 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் உரிய அனுமதியின்றி முறைகேடாக கடத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது. […]
கொரோனா முன்னெச்சரிக்கையாக வீடுகளில் தனிமைப்படுத்தி உள்ளவர்களை கண்காணிக்க சிறப்பு மோட்டார் சைக்கிள் போலீஸ் படை உருவாக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். கேரளாவில் ஒற்றை எண்ணிக்கையில் இருந்த கொரோனா தொற்று எண்ணிக்கையானது தற்போது இரட்டை இலக்கமாக மாறி வருகிறது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்தும், அதற்காக மேற்கொள்ளப்படும் நவடிக்கைகள் குறித்தும் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார். அவர் கூறுகையில், கேரளாவில் இன்று மட்டுமே 16 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. […]
கேரளாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 560 பேரில் 64 பேர் மட்டுமே தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது வரையில் 493 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கேரளாவில் ஒற்றை இலக்கத்தில் இருந்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது திடீரென 26ஆக அதிகரித்துள்ளது. அதில் 2 சுகாதார ஊழியர்கள் ஒரு போலீஸ் அதிகாரி ஆகியோரும் அடக்கம்.மேலும், வெளிநாடு வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 14 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. இன்று மட்டுமே கொரோனா சிகிச்சை முடிந்து […]
கொரோனா பாதிப்பில் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இதில் 3 ஆம் இடத்தில் தமிழகம் உள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்பு காரணமாக அங்குள்ள பால் சுமார் 1,80,000 லிட்டர் வீணாகியுள்ளது. இதனை தமிழக அரசிடம் கேரள அரசு சார்பில் கூறியுள்ளது. இதனை அடுத்து, தமிழகம் சார்பில் ஈரோடு ஆவின் பால் நிறுவனம் கேரளாவில் 50,000 லிட்டர் பாலை வாங்க ஒப்புக்கொண்டுள்ளதாம். இதனால் கேரள முதல்வர் பிரனாயி விஜயன் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார் என தகவல் […]
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை கேரளா புறப்பட்டு சென்றார். தற்போது அவர் கேரள முதல்வர் பிரனாய் விஜயன் உடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த சந்திப்பின் போது பல முக்கிய முடிவுகள் எட்டப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. அதில் முக்கியமாக தமிழக-கேரள மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு உள்ளிட்ட கொள்கைகள் பற்றி ஆலோசிக்க உள்ளதாகவும், பரம்பிக்குளம் – ஆழியாறு மற்றும் ஆனைமலை – பாண்டியாறு – புன்னம்புழா இணைப்பது குறித்தும் ஆலோசிக்க உள்ளனர் என […]
கால மாற்றத்திற்கு ஏற்ப எல்லாவித தொழிற்நுட்பமும் மாற்றம் பெற்று வருகின்றன. ஆனால், சில சமயங்களில் இது போன்ற தொழிற்நுட்ப மாற்றங்கள் பல தவறான முன் உதாரணமாக அமைந்து விடுகின்றன. அந்த வகையில் தான் தற்போது கூகுள் செய்த தவறும் உள்ளது. கூகுள் சர்ச்சில் பலவித குளறுபடிகள் உள்ளது என்பதை நாமே அறிந்து கொள்ள இயலும். அந்த வகையில் தான் சமீபத்தில் ஒரு சர்ச்சையும் ஏற்பட்டுள்ளது. தவறான சேர்ச் கூகுள் தேடுபொறியில் ‘bad chief minister’ என தேடினால் […]
பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளத்திற்கு நிதி திரட்ட அமைச்சர்களுக்கு அனுமதி அளிப்பதாக பிரதமர் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், கூறிய வார்த்தையை பிரதமர் காப்பாற்றவில்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார். புதிய கேரளம் படைக்க உதவி கேட்டு துபாய் அல் நாசர் லீஷர் லாண்டில் நடந்த பொதுநிகழ்ச்சியில் பங்கேற்ற பினராயி விஜயன் பேசியதாவது: பிரதமரை நேரில் சந்தித்து கேரள அமைச்சர்களின் வெளிநாட்டு பயணத்திற்கு அனுமதி கோரப்பட்டது. உலகம் எங்கும் உள்ள மலையாளிகளை நேரில் சந்தித்து உதவி கோரவே […]
திமுக-விற்கு நன்றி தெரிவித்து பினராயி விஜயன் கடிதம்! கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கிய திராவிட முன்னேற்ற கழகத்திற்கு நன்றி தெரிவித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் நன்றி கடிதம் எழுதியுள்ளார்! கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கிய திராவிட முன்னேற்ற கழகத்திற்கு நன்றி தெரிவித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் நன்றி கடிதம் எழுதியுள்ளார்! கடந்த சில வாரங்களுக்கு முன்னதக கேரளாவை சிதைத்து சென்ற கன மழை […]
கொச்சி , கேரளாவில் கடந்த மாதம் ஏற்பட்ட கனமழை மற்றும் பெரு வெள்ளத்தால் அந்த மாநிலமே சின்னாபின்னமாகிப் போனது. அனைவரும் வீடுகளை இழந்து உண்ண உணவு இல்லாமல் தவித்து வந்தனர்.சுமார் 8000 கோடி ரூபாய்க்கு மேல் பொருட்சேதம் ஆனதாகவும், கேரளாவுக்கு அனைவரும் உதவிக் கரம் நீட்ட வேண்டும் எனவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து மத்திய அரசு, தமிழகம் உட்பட மாநில அரசுகள், பிரபலங்கள், நடிகர், நடிகையர்கள், பொதுமக்கள் என பல்வேறு பகுதியிலிருந்தும் […]
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 1 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளார். கேரளாவில் கடந்த மாதம் பெய்த வரலாறு காணாத கனமழை பெரும்வெள்ளத்தால் வெள்ளத்தால், 400-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடத்தைவிட்டு நிவாரண முகாமகளில் தங்கி வந்தனர்.கிட்டத்தட்ட 20,000 கோடிக்கு மேல் இழப்பு இருக்கும் என கருதப்படும் சூழலில் கேரளா மக்களுக்கு பலரும் உதவு வந்தனர்.. கேரள மாநில மழை வெள்ள பாதிப்புக்கு, தமிழக அரசு, பொதுமக்கள், தொழிலதிபர்கள், திரைப் பிரபலங்கள் […]
கேரளா, கேரளாவின் முதலமைச்சர் பினராய் விஜயன் 3 நாட்கள் பயணமாக சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருக்கின்றார்.அவர் கடந்த 19ஆம் தேதியே செல்லவேண்டியதாக இருந்தது , ஆனால் கேரளாவில் சமீபத்தில் ஏற்பட்ட கனமழை , பெரும் வெள்ளம் மிகுந்த பாதிப்பை கொடுத்து 400க்கும் மேற்பட்ட மக்களின் உயிரை காவு வாங்கியது.20,000 கோடி அளவுக்கு மேல் சேதம் ஏற்பட்டது.100 ஆண்டுகளின் இல்லாத பேரிடராக கேரள மழை , வெள்ளம் கருதப்பட்ட சுழலில் தன்னுடைய 3நாட்கள் பயணத்தை இரத்து செய்து விட்டு […]
கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியது. நிபா வைரஸ் நோய் பாதித்து நர்சு, ஆட்டோ டிரைவர் உள்பட 18 பேர் பலியானார்கள். இதனால் கேரளா முழுவதும் பெரும்பீதி ஏற்பட்டது. நிபா வைரஸ் காய்ச்சல் வராமல் இருக்க கோழிக்கோடு மாவட்டத்திற்கு செல்வதையே மக்கள் தவிர்க்கும் நிலை ஏற்பட்டது. அங்குள்ள மக்கள் தெருக்களில் முக கவசம் அணிந்து நடமாடினர். நிபா வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிறப்பு […]
ஹெச்.ராஜா தமிழகத்தில் பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்து பட இடங்களில் வன்முறை போராட்டங்கள் வெடித்து வருகிறது இதில் பல இடங்களில் பெரியார் சிலைகளை சில விஷமிகள் சேதப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில்,கேரள முதல்வர் பினராயி விஜயன் பெரியார் சிலையை இடிப்பதில் எந்த தமிழரும் ஈடுபடமாட்டார்கள் என்று கருத்து தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கேரள மாநிலத்தில், அரிசி திருடியதாக ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட பழங்குடி இன இளைஞர் மதுவின் வீட்டுக்கு முதல்வர் பினராயி விஜயன் இன்று நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், அட்டபாடி அருகே முக்காலியைச் சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞர் மது. இவர் குறும்பர் எனும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். கடந்த வாரம், மது அப்பகுதியில் உள்ள கடையில் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை திருடிவிட்டததாகக் கூறி ஒருகும்பல் அடித்து கொலை செய்தது. மதுவின் […]
உணவு பொருள்களை திருடியதாக கூறி கேரளாவை சேர்ந்த மது என்ற மலைவாழ் வாலிபரை அடித்து கொலை செய்தது ஒரு கும்பல். இந்த சம்பவம் தொடர்பாக அட்டப்பாடி போலீசார் வழக்குப்பதிவுசெய்துள்ளனர். மது, போலீசாரிடம் கூறிய கடைசி வார்த்தைகளை பதிவு செய்து முதல் தகவல் அறிக்கை தயாரித்தனர். இதில் முதல் கட்டமாக முக்காலி பகுதியைச் சேர்ந்த உசேன், உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில், உசேன், கரீம் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். ஆதிவாசி வாலிபர் […]
கேரள முதல்வர் பினராயி விஜயன் மின் திட்ட ஊழல் வழக்கில் கேரள நீதிமன்றத்தால் விடுவித்த நிலையில் தற்போது சிபிஐ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். மின் திட்ட ஊழல் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.வழக்கில் பினராயி விஜயன் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.கேரளாவில் பழமையான நீர்மின் நிலையங்களை புதுப்பிக்கும் திட்டத்தில் ஊழல் என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் மீதும் சிபிஐ குற்றம் சாட்டிவருகிறது. பினராயி விஜயனை கேரள உயர்நீதிமன்றம் வழக்கில் […]